| << மற்ற கட்டுரைகள் |
| நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவித்த, இரு ஈதுப்பெருநாள் (இரவு) களிலும் நானூறு (400) முறை ஓத வேண்டிய கலிமா |
ரசூல் (ஸல்) அவர்கள் கூறியதாக செய்யதுனா அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் - யார் இரு ஈதுப்பெருநாள் (இரவு) களிலும் கீழ்காணும் கலிமாவை நானூறு (400) முறைகள் ஓதிக் கொள்கிறாரோ அவருக்கு:-
1) நானூறு ஹூருல்-ஈன் என்னும் சுவனத்து கன்னிப் பெண்களை அல்லாஹ் ஜோடியாக்கி வைப்பான்.
2) மேலும் அவர் நானூறு அடிமைகளை உரிமை விட்டவர் போலாவார்.
3) மேலும் கியாமத்து நாளில் அவருக்காக மரங்கள் நடப்பட்ட ஒரு நகரத்தை நிர்மானிக்குமாறு அதற்குரிய மலக்குமார்களிடம் அல்லாஹ் பொறுப்புச் சாட்டுகிறான்.
அந்த கலிமாவாவது:-
லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்கலஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து யுஹ்யீ வயுமீத்து வஹுவ ஹய்யுன் லா யமூத்து பியதிஹில் ஹைரு வஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர்.
ஆதாரம்: நூல் - நூஜ்ஹத்துல் மஜாலிஸ். |