History of Masjidhun Noor- Ahlus Sunnath Val Jama-Ath - Maduvinkarai, Guindy, Chennai
Masjidhun Noor - Ahlus Sunnath Val Jama-Ath
Bismillah hir Rahmaanir Raheem
 
 
Donate for Masjid ExpansionMasjidhun Noor HomepageLike us at FacebookClick here for Masjid Location
 
Prayer Timings
PRAYER ADHAN IKAMATH
Fajr 4.50 5.20
Luhar 12.45 1.15
Asar 4.55 5.10
Maghrib 6.45 ---
Isha 8.15 8.30
Jumma 12.30 1.30
Ishrak 6.10 ---
Sunrise 5.50 ---
Noon 12.13 ---
Sunset 6.40 ---
Sahar & Ifthar Time Table
Read Al-Quran with Tamil Meaning & Recitation
Visit Our Imam P.S.Shahul Hameed Siraji Website
Madharasa Classes
Monthly Ladies Bayan
Masjidhun Noor Photo Gallery
MASJIDHUN NOOR HISTORY - மஸ்ஜிதுன் நூர் பள்ளியின் வரலாறு
Masjidhun Noor History

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

சென்னை கிண்டி மடுவின்கரை மஸ்ஜிதுன் நூர் பள்ளியின் அதிகாரபூர்வமான இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். கடந்த 30-வருடங்களாக அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் பள்ளியாக மிக சிறப்பான முறையில் இயங்கி கொண்டு இருக்கிறது.

1965-களில், நெல்லை கயத்தார் பகுதியை சேர்ந்தவர்களில் சிலர் வியாபாரம் செய்வதற்காக சென்னை வந்து, கிண்டி மடுவிங்கரையில் தங்கி இருந்த போது அவர்களின் முயற்சியால் ஒரு மிகச் சிறிய அறையில் மதரஸா ஒன்று துவங்கப்பட்டது. பின்னர் 1983-ஆம் ஆண்டில் அவர்கள் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் ஒன்றை தொடங்கினார்கள். அந்த நற்பணி மன்றத்தின் உறுப்பினர்கள் மேற்கொண்ட மிகப்பெரும் முயற்சியால் 1984-ஆம் ஆண்டு மஸ்ஜிதுன் நூர் பள்ளி ஆரம்பிக்கப்பட்டு முதன் முதலாக லைலத்துல் கதிர் இரவின் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.

அதன் பின்னர் ஒவ்வொரு வாரமும் ஜும்மா தொழுகைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு பின்னாளில் நிரந்தரமாக ஒரு இமாம் நியமிக்கப்பட்டு ஐந்து வேளை தொழுகை நடக்க கூடிய பள்ளியாக முழுமை பெற்றது. ஒரு சிறிய அறையில் மதரஸாவாக துவங்கப்பட்டு படிப்படியாக விரிவாக்கம் செய்யப்பட்டு 2400-சதுர அடியில் 600 பேர் தொழக்கூடிய அளவிற்கு ஒரு முழுமையான பள்ளிவாசாலாக 1990-களில் உருப்பெற்றது.

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் மஹல்லா வாசிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்த காரணத்தினால் ஈத் தொழுகையை இரண்டு ஜமாத்தாக நடத்தும் நிலை பல ஆண்டுகளாக நீடித்து கொண்டிருந்தது.

மஹல்லா வாசிகளின் முழு ஒத்துழைப்போடும் உதவியோடும் 2010-ஆம் ஆண்டு, இந்த பள்ளி இடிக்கப்பட்டு 1500 பேர் தொழக்கூடிய மூன்று அடுக்குகள் கொண்ட புதிய பள்ளி கட்டும் பணி தொடங்கியது.

அந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் நமது மஹல்லாவை சேர்ந்த அல்ஹாஜ் அப்பாஸ் மரைக்காயர் அவர்களின் வீட்டு மாடியில் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பான முறையில் அங்கு தொழுகை நடத்தப்பட்டது. பின்னர் 2011-ஆம் ஆண்டு லைலத்துல் கதிர் அன்று (27.08.2011) பணிகள் முற்றுப் பெறாத நிலையில் இருந்த புதிய பள்ளியில் தொழுகை ஆரம்பிக்கப்பட்டது. தமிழ்நாடு தலைமை காஸி முப்தி சலாஹுத்தீன் முஹம்மத் அய்யூப் அவர்கள் திறப்பு விழாவில் கலந்து கொண்டு மஹ்ரிப் தொழுகையை நடத்தி சிறப்பான முறையில் துவக்கி வைத்தார்கள்.

தற்போது மனாரா அமைக்கும் பணியும் சில மராமத்து பணிகளும் மட்டும் பாக்கி இருக்கும் நிலையில் பள்ளி சிறப்பாக இயங்கி கொண்டிருக்கிறது. பெருகி வரும் மஹல்லா வாசிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு பள்ளிக்கு அருகில் 525-சதுர அடியில் இருக்கும் இடம் ஒன்று 33,50,000-ருபாய் மதிப்பீட்டில் வாங்கப்பட்டு மிகச் சிறப்பான முறையில் 04.06.2014 அன்று அந்த இடம் பத்திரப் பதிவு செய்யப்பட்டது. இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து செய்யப்பட இருக்கின்ற மனாரா அமைக்கும் பணிக்காகவும், பள்ளியின் விரிவாக்க பணிகளுக்காகவும் உங்களால் இயன்ற வரை மிக தாராளமாக உதவுமாறு மஸ்ஜிதுன் நூர் நிர்வாகத்தின் சார்பாகவும் மஹல்லா வாசிகளின் சார்பாகவும் கேட்டுக் கொள்கிறோம்.

அல்லாஹ்விற்காக யார் ஒரு பள்ளியை கட்டுகின்றாரோ, அல்லாஹ் அவருக்காக அதுபோன்ற (வீட்டை) சுவர்க்கத்தில் கட்டுகின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். - அல்-ஹதீஸ் (புகாரி, முஸ்லிம்)

மஸ்ஜிதுன் நூர் பள்ளியின் விரிவாக்கத்திற்கு நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்.

ஜஸாக் அல்லாஹ்.

Assalamu Alaikkum (varah)

Welcome to the official website of Masjidhun Noor, Maduvinkarai, Guindy, Chennai, which acts as an Ahlus Sunnath Val Jama-Ath Masjid for past 30-years.

In 1965s, a Madharasa was started in a small room in Maduvinkarai by a group of people who came from Nellai Kayathar, for business purpose. Later in 1983 they started a Islamic Youth Charitable Foundation. In 1984, Masjidhun Noor Mosque was started with the efforts made by the members of this Islamic Youth Foundation and prayer was started on a Lailathul Qadr Night.

After that, Jumma Prayers were organized every week & as days passed by, a full-time Imam was appointed & the Masjid got to a complete shape with 5-times prayer being conducted every day. Started as a Madharasa in a small room, the step-by-step expansion led to a 2400Sq.Ft Masjid accommodating 600 people to pray, in 1990s.

With the blessings of the Greatest Almighty, the population of Mahalla people increased day by day & as a result, the management was forced to conduct Eid Prayers as 2 Jamaths for so many years.

In 2010, with the full support of Mahalla people, the Masjid was demolished & a new Masjid construction was started with 3-floors which can accommodate 1500 people.

During that construction stage, the Masjid functioned temporarily in the terrace of Al-Haj Abbas Maraickar house. Later in 2011, prayers was started in the incomplete New Masjid from Laylatul Kadr (27.08.2011) onwards. Tamilnadu Chief Khazi Mufti Salahuddin Mohammed Ayub attended the Opening inauguration Ceremony during Ifthar & Conducted Maghrib Prayer as well.

The Masjid is almost complete, but Minaret has to be added along with some patch-up works. Considering the increasing population of Muslims in this area, the Management has purchased a 525Sq.Ft land near by the Mosque for the cost of 33,50,000Rs & the Registration of the land has been done on 04.06.2014.

On behalf of Masjidhun Noor Management & Mahalla People, We request you to help us with your donations, so that the Minaret work & the expansion work also can go ahead at the earliest.

Nabi (saw) said that a person who builds a Masjid for the sake of Allah (swt), Allah (swt) will in return build a house for him in Jannah. - Al Hadith (Bukhari, Muslim).

Click here to Donate for the expansion work of Masjidhun Noor.

Jazak Allah.

  Main Links
- Homepage
- Latest Events
- Masjid Location
- Photo Gallery
- Video Gallery
About Masjidhun Noor
- Masjidhun Noor History
- Management Committee
- Highlevel Committee
- Execution Committee
- Donate for Masjidhun Noor
Masjidhun Noor Activities
- Madharasa Classes
- Ladies Events
- Nikkah Registration & NOC
Bayans
- Jumma Bayans
- Weekly Bayans
- Ladies Bayans
- Special Bayans
- Ramadhan Special Bayans
- Ramadhan Taraweeh 2017
Useful Links
- Islamic Artices
- Islamic Websites
- Haj Committee Details
- Minority Scholarships
- Government Schemes
 
Copyrights 2010 & Beyond. Masjidhun Noor - Ahlus Sunnath Val Jama-Ath
Total Visitors So Far:
Designed & Maintained by: ‘Jumaana’ Syed Ali
1 2 3 4 5 6