பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்னை ஆயிஷா (ரலி) அன்ஹா அவர்களிடம் “தினமும் உறங்கும் முன்பு ஒரு குர்ஆன் ஓதிய நன்மையும், எல்லா நபிமார்களுடைய ஷபாஅத் கிடைக்கவும், நாளை மறுமையில் எல்லா மூஃமின்களும் உங்களை கொண்டு திருப்தி அடையவும், ஒரு ஹஜ், உம்ரா செய்த நன்மையும் அடைய வேண்டுமா” என்று வினவிவிட்டு அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறிய வழிமுறைகள்:
1) தினமும் உறங்கும் முன்பு ஒரு குர்ஆன் ஓதிய நன்மை வேண்டுமா?
தினமும் இரவு தூங்கும் முன்பு “சூரத்துல் இக்லாஸ் (குல்ஹுவல்லாஹு அஹத்)” சூராவை ஒரு முறை ஓதினால் ஒரு குர்ஆன் ஓதிய நன்மை கிடைக்கும்.
“குல்ஹு வல்லாஹு அஹத் அல்லாஹுஸ் சமத் லம் யலித் வலம் யூலத் வலம் யகுல் லஹு குபுவன் அஹத்." ‘அல்லாஹ் ஒருவன்’ எனக் கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. (அல் குர்ஆன் - 112).
2) எல்லா நபிமார்களுடைய ஷபாஅத் உங்களுக்கு கிடைக்க வேண்டுமா?
தினமும் இரவு தூங்கும் முன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும் எல்லா நபிமார்கள் மீதும் சலவாத் சொல்ல வேண்டும். அந்த சலவாத் “அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஜமீயில் அன்பியாயி குல்லிஹிம்”. இதனை தொடர்ந்து இரவில் ஓதி வந்தால் எல்லா நபிமார்களுடைய ஷபாஅத் கிடைக்கும்.
3) எல்லா மூஃமின்களும் நாளை மறுமையில் உங்களை கொண்டு திருப்தி பட வேண்டுமா?
எல்லா முஃமின்களும் திருப்தி கொள்ள செய்ய வேண்டிய அமல். தினமும் இரவு தூங்கும் முன்பு “அல்லாஹும் மக்பிர் லீ வல் முஃமினீன வல் முஃமினாத் வல் முஸ்லீமீன வல் முஸ்லிமாத்” என்கிற எளிய துஆவின் மூலம் அவர்களுக்காக பாவ மன்னிப்பு தேட வேண்டும்.
4) ஹஜ், உம்ரா செய்த நன்மை வேண்டுமா?
தினமும் இரவு தூங்கும் முன்பு ஒரு முறையாவது “சுப்ஹானல்லாஹி வல்ஹம்துல்லில்லாஹி வலா இலாஹா இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்” என்ற தஸ்பீஹை தொடர்ந்து ஓதி வந்தால் ஹஜ், உம்ரா செய்த நன்மை கிடைக்கும்.
ஆதாரம்: நூல் - தஃப்ஸீர் ஹனஃபி
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ்ரத் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கூறியது:
1) உலகில் நீண்ட நாள் வாழ வேண்டுமா?
உலகில் அதிக காலம் வாழ ஒழு அதிகமாக செய்ய வேண்டும். எப்போதும் ஒழுவோடு இருக்க வேண்டும்.
2) செல்வந்தராக வாழ வேண்டுமா?
உலகில் செல்வத்தோடு வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டால் “அஸ்ஸலாமு அலைக்கும்” என்று ஸலாம் கூறி வீட்டிற்குள் நுழையுங்கள்.
3) நிறைய நன்மைகள் வேண்டுமா?
நிறைய நன்மைகள் பெற விரும்பினால் யாரை பார்த்தாலும் அறிமுகமானவரானாலும், அறிமுகம் இல்லாதவராயினும் “அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு ” என்று ஸலாம் கூறுங்கள். ஒருவருக்கு ஒருமுறை இவ்வாறு ஸலாம் கூறினால் 30 நன்மை கிடைக்கும். தினம் பத்து பேருக்கு இவ்வாறாக ஸலாம் கூறினால் 300 நன்மைகள் கிடைக்கும்.
ஆதாரம்: நூல் - தஃப்ஸீர் இப்னு கஸீர் |