Masjidhun Noor - Ahlus Sunnath Val Jama-Ath - Maduvinkarai, Guindy, Chennai
Masjidhun Noor - Ahlus Sunnath Val Jama-Ath
Bismillah hir Rahmaanir Raheem
 
 
Donate for Masjid ExpansionMasjidhun Noor HomepageLike us at FacebookClick here for Masjid Location
 
Prayer Timings
PRAYER ADHAN IKAMATH
Fajr 4.55 5.25
Luhar 12.45 1.15
Asar 4.45 5.00
Maghrib 6.26 ---
Isha 7.50 8.05
Jumma 12.30 1.30
Ishrak 6.22 ---
Sunrise 6.02 ---
Noon 12.15 ---
Sunset 6.21 ---
Donate for Masjidhun Noor Expansion
Read Al-Quran with Tamil Meaning & Recitation
Madharasa Classes
Monthly Ladies Bayan
Masjidhun Noor Photo Gallery
ISLAMIC ARTICLES - இஸ்லாமிய கட்டுரைகள்
<< மற்ற கட்டுரைகள்
குழப்பங்களும் அதன் தீர்வு முறைகளும் - ஹனபி தொழுகை முறை

கிப்லாவை முன்னோக்குதல்:
..நபியே! மஸ்ஜிதுல் ஹராமின் பக்கம் உமது முகத்தைத் திருப்புவீராக! (முஸ்லிம்களே!) நீங்கள் எங்கிருந்த போதிலும் (தொழுகையின் போது) உங்களது முகங்களை அந்த(கிப்லாவின்) பக்கமே திருப்புங்கள்..(2:144)

நம்முடைய தொழுகையைத் தொழுது, நம்முடைய கிப்லாவை முன்னோக்கி, நாம் அறுப்பதைப் புசித்து வருகிறவர்தாம் முஸ்லிம். அப்படிப்பட்டவர் அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் பொறுப்பில் இருக்கிறார். எனவே அவரின் பொறுப்பு விஷயத்தில் அல்லாஹ்வின் ஒப்பந்தத்தை முறிக்காதீர்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்கள்(புகாரி(ரஹ்) 391)

ஹம்ஸாவின் தந்தையே! ஓர் அடியானுடைய உயிருக்கும் பொருளுக்கும் சேதம் ஏற்படுத்துவதைத் தடை செய்வது எது? எனநான் அனஸ்(ரலி) அவர்களிடம் கேட்டதற்கு, வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று சான்று கூறி, நம்முடைய கிப்லாவை முன்னோக்கி, நம்முடைய தொழுகையைத் தொழுது, நாம் அறுத்தவற்றை சாப்பிட்டு வருகிறவர் முஸ்லிம். ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உரிய உரிமைகள் அவருக்கும் உண்டு. ஒவ்வொரு முஸ்லிமுக்கும் (குற்றம் புரிவதால்) என்ன தண்டனை உண்டோ அது அவருக்கும் உண்டு' என்று அனஸ்(ரலி) கூறினார்" என மைமூன் இப்னு ஸியாஹ் அறிவித்தார்கள். (புகாரி(ரஹ்) 393)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களுடைய வாகனத்தின் மீது அமர்ந்து, அது செல்கிற திசையை நோக்கித் தொழுபவர்களாக இருந்தார்கள். கடமையான தொழுகையைத் தொழ விரும்பினால் வாகனத்திலிருந்து கீழே இறங்கி கிப்லாவை முன்னோக்கித் தொழுவார்கள்" என ஜாபிர்(ரலி) அறிவித்தார்கள்(புகாரி(ரஹ்) 400)

தொழுகையில் ஸஜ்தாவின் பக்கம் பார்வையை செலுத்துவது:
நபி(ஸல்) அவர்கள் தொழுவார்களானால், தங்களது நிலையை தாழ்த்தியவாறு தங்களது பார்வையை பூமியின் பக்கமாக செலுத்துவார்கள் என அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
இமாம் பைஹகி(ரஹ்)
இமாம் ஹாகிம்(ரஹ்)

நபி(ஸல்) அவர்கள் (தொழுகைக்காக) காஃபாவில் நுழைந்தார்கள் தொழுகை முடிந்து வெளியேறும் வரையில் அவர்கள் பார்வை சுஜூது செய்யும் இடத்தைவிட்டு வேறெங்கும் போகவில்லை என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் தெரிவிக்கிறார்கள்
இமாம் இப்னுஹிப்பான்(ரஹ்) - 4 ம் பாகம் 332
இமாம் ஹாகிம்(ரஹ்) - 471

இமாமை பின் தொடர்ந்து தொழுதல்:
நபி(ஸல்) அவர்கள் ஒரு முறை குதிரையின் மீது ஏறியபோது கீழே விழுந்துவிட்டார்கள். அதனால் அவர்களின் வலது விலாப் புறத்தில் அடி பட்டது. எனவே அவர்கள் ஒரு தொழுகையை உட்கார்ந்தவாறே தொழுதார்கள். நாங்களும் அவர்களுக்குப் பின்னால் உட்கார்ந்தவாறுதொழுதோம் நபி(ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததும் இமாம் பின்பற்றப் படுவதற்ககாகவே நியமிக்கப்பட்டுள்ளார். அவர்கள் நின்று தொழுதால் நின்று நீங்களும் நின்று தொழுங்கள். அவர் ருகூவு செய்தால் நீங்களும் ருகூவு செய்யுங்கள். அவர் தலையை உயர்த்தினால் நீங்களும் தலையை உயர்த்துங்கள். அவர் ஸமி அல்லாஹ் லிமன் ஹமீதா என்று சொன்னால் நீங்கள் ரப்பனா வலகல் ஹம்து என்று செல்லுங்கள். அவர் நின்று தொழுதால் நீங்களும் நின்று தொழுங்கள். அவர் உட்கார்ந்தது தொழுதால் நீங்கள் எல்லோரும் உட்கார்ந்து எதாழுங்கள். என்று கூறினார்கள் என அனஸ் பின் மாலிக்(ரலி) அறிவித்தார்கள்(முஸ்லிம்(ரஹ்) 694, திர்மதி(ரஹ்) 329, அபூதாவுத்(ரஹ்) 509, இப்னுமஜா(ரஹ்) 1228, நஸயி(ரஹ்) 786,புகாரி(ரஹ்) 683.)

அபூசயிது அல்குத்ரி(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் (ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள், தம் தோழர் பின்னால் விலகு நின்றதை கண்டார்கள் அப்போது முன்வரிசைக்கு வந்து என்னை பிற்றி தொழுகுங்கள், உங்களுக்கு பின்னால் இருப்பவர்கள் உங்களைப் பின்பற்றி தொழட்டும், மக்களுள் சிலர் பின் தங்கி கொண்டே இருப்பார்கள், முடிவில் அவர்களை மாண்பும் வல்லமையும் மிக்க அல்லாஹ்(தனது அருளிலிருந்து) பின் தங்கிவிடுவான் என்று கூறினார்கள்.(முஸ்லிம்(ரஹ்) 747,அபூதாவுது(ரஹ்) 582,இப்னுமஜா(ரஹ்) 968,நஸயி(ரஹ்) 787)

இமாமை முந்தாதீர்கள்:
உங்களில் ஒருவர் தொழுகையில் இமாமை முந்தித் தம் தலையை உயர்த்துவதால் அவரின் தலையைக் கழுதையுடை தலையாகவோ அல்லது அவரின் உருவத்தைக் கழுதையுடைய உருவமாகவோ அல்லாஹ் ஆக்கி விடுவதை அஞ்ச வேண்டாமா?.என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள். (புகாரி(ரஹ்) 691, முஸ்லிம்(ரஹ்) 731, திர்மதி(ரஹ்) 531,அபூதாவுது(ரஹ்) 528, இப்னுமஜா(ரஹ்) 951, நஸயி(ரஹ்) 819)

தொழுகை தொடங்கும் போது அல்லாகு அக்பர் என்று கூறுதல்:
நான் நபி(ஸல்) அவர்களுக்கு பின்னால் (நின்று) தொழுதேன், அவர்கள் தொழுகையை தொடங்கிய போது அல்லாஹ் அக்பர் என்று தக்பீர் கூறினார்கள். (அப்போது) தம் காதுகளுக்கு நேராக தம் கைகளை உயர்த்தினார்கள், பின்னர் அல்ஃபாத்திஹா அத்தியாத்தை ஓதினார்கள் என வாயில் பின் ஹிஜ்ர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(நஸயி(ரஹ்) 869)

காதுகளுக்கு நேராக கைகளை உயர்த்துதல்:
நான் நபி(ஸல்) அவர்களுக்கு பின்னால் (நின்று) தொழுதேன், அவர்கள் தொழுகையை தொடங்கிய போது அல்லாஹ் அக்பர் என்று தக்பீர் கூறினார்கள். (அப்போது) தம் காதுகளுக்கு நேராக தம் கைகளை உயர்த்தினார்கள், பின்னர் அல்ஃபாத்திஹா அத்தியாத்தை ஓதினார்கள் என வாயில் பின் ஹிஜ்ர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்...நஸயி(ரஹ்)869)

..நபி(ஸல்)அவர்கள் தொழுகையை தொடங்கிய போது அல்லாஹ் அக்பர் என்று தக்பீர் கூறினார்கள். (அப்போது) தம் காதுகளுக்கு நேராக தம் கைகளை உயர்த்தினார்கள்.. என பாரப் பின் ஆஸிப்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(இப்னு அபிஷைபா (ரஹ்) 2412)

நபி(ஸல்) தொழுகையில் தக்பீர் கூறுவார்கள், (அப்போது) தம் காது சோனைகளுக்கு நேராக கைகளை உயர்த்துவார்கள்....என அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்(அபூயாலா(ரஹ்) 3735, தப்ரானி(ரஹ்) 2/107, தாரகுத்னி(ரஹ்) 1135, இப்னு குத்மா(ரஹ்) 2/27).

தங்களது இரு காதுகளுக்கு சமமாக இரு கைகளையும் நபி(ஸல்) அவர்கள் உயர்த்தினார்கள் என மாலிக் பின் அல் ஹூவைரிஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் (இப்னுமஜா(ரஹ்) 849,நஸயி(ரஹ்) 870)

நபி(ஸல்) அவர்கள் தம் இரு காது சோணைகளுக்கு சமமாக தம் கைகளை உயர்த்தியதை நான் பார்த்திருக்கின்றேன் என மாலிக் பின் அல் ஹூவைரிஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்(நஸயி(ரஹ்) 871, முஸ்லிம்(ரஹ்) 642,அபூதாவுது(ரஹ்) 636, அஹமது(ரஹ்) 19626, தாரமி(ரஹ்) 1223).

தக்பிர் கட்டும் போது விரல்களை நீட்ட வேண்டும்:
நபி(ஸல்) அவர்கள் தொழுகைக்கு நிற்கும் போது இரு கைகளையும் (மூடாமல்) நீட்டுவார்கள் என அபூஹூரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்(திர்மதி(ரஹ்) 223, அபூதாவுத்(ரஹ்) 642, நஸயி(ரஹ்)873,தாரிமீ 1209)

உயர்த்திய கைகளை எவ்வாறு வைக்க வேண்டும்:
தொழுகையில் தொப்புளுக்கு மேல் நெஞ்க்கு கீழ் மற்றும் தொப்புளுக்கு கீழ் கைகளை வைப்பது:

நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு தொழுகை நடத்தும் போது தமது வலது கரத்தால் இடது கரத்தை பிடித்து கொள்வார்கள் என ஹுல்பு(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்(திர்மதி(ரஹ்) 234, இப்னுமஜா(ரஹ்))
ஹுல்பு(ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதிஸ் ஹசன் தரத்தலமைந்ததாகும். நபித்தோழர்கள், தாபியீன்கள் அதற்கும் அடுத்த தலைமுறை அறிஞர்கள் இவ்வாறே செயல்பட்டுள்ளனர், (ஆயினும்) இரு கைகளையும் தொப்புளுக்கு மேல் வைக்கவேண்டுமென் சிலரும், தொப்புளுக்கு கீழ் வைக்க வேண்டும் என்று சிலரும் கருதுகின்றனர்.(சிறந்தது) எது என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன, இரு முறையுமே அவர்களிடம் ஆதாரபூர்வமானவைத்தான்.

இமாம் முஸ்லிம்(ரஹ்) அவர்களின் விளக்கம்:
தொழுகையின் ஆரம்பத்தில் தக்பீரத்துல் இஹ்ராம் கூறிய பின் நெஞ்க்குக் கீழ் தொப்புளுக்கு மேல் உள்ள பகுதியில் இடக் கையின் மீது வலக் கையை வைப்பதும், சஜ்தாவில் தோள்களுக்கு நேராக நிலத்தில் இரு கைகளையும் வைப்பதும் சுன்னதாகும் (விரும்பத்தக்கதாகும்).(இமாம் முஸ்லிம்(ரஹ்)

தொழுகையில் (இடது) முன் கையின் மீது (வலது) முன் கையை வைத்து இரண்டையும் தொப்புளுக்கு கீழ் வைப்பது நபி(ஸல்) அவர்களின் வழிமுறையாகும் என அலி(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்(அபூதாவுத்(ரஹ்) 645, பைஹகி(ரஹ்) 2170, 2171)

நபி(ஸல்) அவர்கள் தமது வலதை கையை இடது கையின் மீது அதை தொப்புளுக்கு கீழே வைத்ததை நான் பார்த்தேன் என வாயில் பின் ஹுஜ்ர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்(இப்னு அபிஷைபா(ரஹ்) 343,இமாம் ஹாசிம் சிந்தி(ரஹ்)பக்கம் 64,இமாம் நிமாவி(ரஹ்)330)

இந்த ஹதிஸில் தொடரில் அனைவரும் நம்பகமானவரே என இப்னு அபிஷைபா(ரஹ்),இமாம் ஹாசிம் சிந்தி(ரஹ்),இமாம் நிமாவி(ரஹ்) அவர்கள் அனைவரும் ஸஹிஹ் வான தரத்தில் அமைத்துள்ளார்கள், எனவே இந்த ஹதிஸ் ஸஹிஹ் தரத்தில் அமைந்துள்ளதால் இந்த ஹதிஸ் ஆதரபூர்வமானதாகும்.

ஹஜ்ஜாஜ் இப்னு அல் ஹசன்(ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள், நான் அபுமிஜ்லஸ்(ரஹ்)(தாபியி) அவர்களிடம் கேட்டேன் தொழுகையில் எப்படி கையை கட்ட வேண்டும், அதற்கு அவர்கள் இடது கையின் மீது வலது கையை வைத்து தொப்புளுக்கு கீழ் கையை கட்ட வேண்டும் என அறிவித்தார்கள்

இப்ராஹிம் நகயீ(ரஹ்)(தாபியி) அவர்கள் தொழுகையில் இடது கையின் மீது வலது கையை வைத்து தொப்புளுக்கு கீழ் கையை கட்டினார்கள்(இப்னு அபிஷைபா(ரஹ்) 390,இப்னுத் துர்குமனி(ரஹ்) 47)

இந்த ஹதிஸ் இப்னு அபிஷைபா(ரஹ்) அவர்கள் ஹசன் தரத்தலமைந்ததாகும்,அதனால் இது ஹசன் தரத்தில் அமைந்துள்ளதால் இதுவும் ஆதரபூர்வமானதாகும்.

இப்னுத் துர்குமனி(ரஹ்) அவர்கள் இதனுடைய தொடர் மிகவும் அழகானதாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்கள், இதை ஸஹிஹ் வான தரத்தில் பதிவு செய்துள்ளார்கள்.

இமாம் நிமாவி(ரஹ்) அவர்களும் முஹத்தித் யூசுன் பின் நூரி(ரஹ்) அவர்களும் இதை ஸஹிஹ் வான தரத்தில் பதிவு செய்துள்ளார்கள்.

தொழுகையில் ஒரு முன்கையை மற்றொரு முன்கையின் மீது வைத்து தொப்புளுக்கு கீழ் கட்ட வேண்டும் என அபுஹுரைரா(ரலி) அவர்கள் அறிவித்தாக அபுவாயில்(ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(அபூதாவுத்(ரஹ்) 647,அல்ஜவரல் நகீ(ரஹ்) 31)

இந்த ஹதிஸ் பலகினமானது என்று அபூதாவுத்(ரஹ்) தெரிவிக்கின்றார்கள், இருந்த போதிலும் இமாம் அல்ஜவரல் நகீ (ரஹ்) அவர்கள் ஸஹிஹ்வான தரத்தில் இந்த ஹதிஸ் பதிவு செய்துள்ளார்கள், அதாவது இவரை நம்பகமானவர் என்று கூறியுள்ளார்கள், அதனால் இது ஸஹிஹ்வான தரத்தில் அமைந்துள்ளதால் இதுவும் ஆதரபூர்வமானதாகும்.

அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் மூன்று காரியங்கள் நுபுவத்தின் தன்மைகளாக உள்ளன. நோன்பு திறப்பதை விரைவுபடுத்துதல், ஸஹர் செய்வதை தாமதப்படுத்துதல், தொழும்போது இடது கையின் மீது வலது கையை வைத்து தொப்புளுக்கு கீழ் கையை கட்டுவதாகும்(இப்னு ஹிப்பான்(ரஹ்),அல்ஜவரல் நகீ(ரஹ்), இப்னு ஹிப்பான்(ரஹ்) மற்றும் அல்ஜவரல் நகீ(ரஹ்)அவர்களும் இதை ஸஹிஹ் வான தரத்தில் பதிவு செய்துள்ளார்கள். எனவே இது ஸஹிஹ்வான தரத்தில் அமைந்துள்ளதால் இதுவும் ஆதரபூர்வமானதாகும்.

மறுப்புகளும் விளக்கமும்:
இதில் அப்துர் ரஹ்மான் இஸ்ஹாக் அவர்கள்(ரஹ்) இடம் பெறுகிறார்கள். இவர் பலகினமானவர் என்பதால் இந்த ஹதிஸ் பலகினமானது என்று அபூதாவுத்(ரஹ்) தெரிவிக்கின்றார்கள்,

இருந்த போதிலும் இமாம் திர்மதி(ரஹ்)(ரஹ்) அவர்கள் ஹசன் தரத்தில் இவரது ஹதிஸ்களை பதிவு செய்துள்ளார்கள், அதாவது இவரை நம்பகமானவர் என்று கூறியுள்ளார்கள், அதனால் இது ஹசன் தரத்தில் அமைந்துள்ளதால் இதுவும் ஆதரபூர்வமானதாகும்.

இமாம் ஹாகிம்(ரஹ்) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் இஸ்ஹாக் என்பவர் மிகவும் பலமானவர், மேலும் அவர் அறிவிக்கும் அனைத்து ஹதிஸ்களை ஸஹிஹ்வான தரத்தில் பதிவு செய்துள்ளார்கள்

அப்துர் ரஹ்மான் பின் இஸ்ஹாக் அவர்கள் கூஃபா பகுதியில் மிகவும் சிறந்த மார்க்க அறிஞராகும், உண்மையாளராகவும், நேர்மையானவர் ஆவார்கள்,

தொழுகையை துவங்கும் போது ஓதும் துஆ:
நபி(ஸல்) அவர்கள் இரவில் எழும்போது '' சுப்ஹானக்கல்லாஹும்ம வபிஹம்திக வதபாரகஸ்முக்க வத ஆலா ஜத்துக வலாயிலாஹா கைருக'' என்று கூறிவிட்டு அல்லாஹீ அக்பர் கபீரா என்று கூறுவார்கள். அதன் பிறகு அவூதுபில்லாஹிஸ்ஸமீஇல் அலீம் மினஷ்ஷை தானிர்ரஜீம் மின் ஹம்ஸிஹி, வநஃப்கிஹி,வநஃப்ஸிஹி என்று கூறுவார்கள்.இதை அபூஸயத் அல்குத்ரி(ரலி) அறிவிக்கிறார்கள்,

இது குறித்து அலி(ரலி),ஆயிசா(ரலி),அப்துல்லாபின்மஸ்வூத்(ரலி),ஜீபைர்(ரலி),ஜீபைர் பின் முதிம்(ரலி),இப்னு உமர்(ரலி) ஆகியோரும் அறிவித்துள்ளார்கள். அபூஸய்த்(ரலி) அறிவிக்கும் இந்த ஹதிஸ் மிகவும் பரவலாக அறியப்பட்டாதகும்.. மார்க்க அறிஞர்களில் ஒரு பகுதியினர்கள் இதனடிப்படையில் செயல்படுள்ளனர். ஆனால் பெரும்பாலான மார்க்க அறிஞர்கள் லாயிலாஹ கைருக வரை நபி(ஸல்) அவர்கள் ஓதியதாக கூறப்படுகினறது. உமர்(ரலி), அப்துல்லா பின் மஸ்வூத்(ரலி) ஆகியோர் வழியாகவும் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. தாபின்களிலும் மற்றவர்களிலும் உள்ள அதிகமான மார்க்க அறிஞர்கள் இதனடிப்படியில் செயல் பட்டுள்ளனர்கள்.
(இமாம் இப்னு அபிஷைபா(ரஹ்) 2402,
இமாம் இப்னு ஜரீர்(ரஹ்),
இமாம் தபாரி(ரஹ்) 32403 & 32404,
இமாம் திர்மதி(ரஹ்)225
இமாம் அஹமத்(ரஹ்) 11047,11230,
இமாம் இப்னுமஜா(ரஹ்) 796,
இமாம் நசயி(ரஹ்) 899,890,
இமாம் ஹைதமி(ரஹ்) 2/265 (ஸஹிஹ்),
இமாம் அபூதாவூத் (ரஹ்) 658, 659,

அன்னை ஆயிசா(ரலி),அனஸ்(ரலி) மற்றும் பல சகாபாக்கள் அவ்ர்கள் அறிவிக்கிறார்கள் நபி(ஸல்) அவர்கள் தொழுகையில் ஆரம்பத்தில் ''சுப்ஹானக்கல்லாஹும்ம வபிஹம்திக வதபாரகஸ்முக வத ஆலா ஜத்துக வலாயிலாஹா கைருக'' என ஓதுவார்கள்
இமாம் இப்னு மஜா(ரஹ்) 798,
இமாம் அபுதாவுத்(ரஹ்) 659,
இமாம் திர்மதி(ரஹ்)226,
இமாம் ஹாகிம்(ரஹ்)849,
இமாம் பைஹஹி(ரஹ்) 2357
,இமாம் ஹாகிம்(ரஹ்) ஸஹிஹ் வான ஹதிஸ் என்று தனது கித்தாபிலும்,
இமாம் இப்னுமஜா(ரஹ்)1/135(ஸஹிஹ்)தரப்பிலும் பதிவு செய்துள்ளார்கள்
,இமாம் அபுதாவுது(ரஹ்)மற்றும்
இமாம் நஸயி(ரஹ்) ஸஹிஹ்(864) மற்றும் ஹசன் தரப்பிலும் பதிவு செய்துள்ளார்கள்

திர்மதி இந்த ஒரு ஸனா தவிர வேற ஸனாவை தனது கித்தாபில் பதிவு செய்யவில்லை, இமாம் திர்மதி(ரஹ்) இமாம் இந்த ஸனாவை தவிர வேற ஸனாவே அவர் ஓதினது கிடையாது.இமாம் அபுயாலா(ரஹ்)3735, இமாம் தப்ரானி(ரஹ்)2/107, இமாம் தாரகுத்னி(ரஹ்)1135,இமாம் இப்னு குத்மா(ரஹ்)2/27 ஆகியோர் ஸஹிஹ் வான ஹதிஸ் என்று தனது கித்தாபில் பதிவு செய்துள்ளார்கள்.

அப்தா(ரலி) மற்றும் அஸ்வாத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் உமர்(ரலி) அவ்ர்கள் தொழுகையின் ஆரம்பத்தில் ''சுப்ஹானக்கல்லாஹும்ம வபிஹம்திக வதபாரகஸ்முக வத ஆலா ஜத்துக வலாயிலாஹா கைருக''என ஓதுவார்கள்.
இமாம் முஸ்லிம்(ரஹ்) 606,
இமாம் இப்னு அபிஷைபா(ரஹ்) 2395,
இமாம் தாகவி(ரஹ்)1/198,
இமாம் பைஹஹி(ரஹ்) 2350,
இமாம் நிமாவி ஸஹிஹ் வான ஹதிஸ் என்று தனது கித்தாபில் பதிவு செய்துள்ளார்கள்.

இறுதியாக நமது மிகப்பெரிய சகபாக்கள் அபுபக்கர் சித்திக்(ரலி),உமர்பின் கத்தாப்(ரலி), உஸ்மான்(ரலி),அலி(ரலி) இப்னு மஸுது(ரலி) மற்றும் பல சகாபாக்கள் அவ்ர்கள் அறிவிக்கிறார்கள் நபி(ஸல்) அவர்கள் தொழுகையில் ஆரம்பத்தில் ''சுப்ஹானக்கல்லாஹும்ம வபிஹம்திக வதபாரகஸ்முக வத ஆலா ஜத்துக வலாயிலாஹா கைருக''என ஓதுவார்கள்
இமாம் தாரகுத்னி(ரஹ்)1141,
இமாம் நிமாவி ஹசன் தரப்பிலும்,
இமாம் சையது பின் மன்சூர் 2/202,
இப்னு அபிஷைபா(ரஹ்) 2391,2393,
இமாம் முந்தகீர்(ரஹ்),
இமாம் தைமியா(ரஹ்), 2/203 ஆகியோர் ஸஹிஹ் வான ஹதிஸ்களில் பதிவு செய்துள்ளார்கள்.

குறிப்பு:''சுப்ஹானக்கல்லாஹும்ம வபிஹம்திக வதபாரகஸ்முக வத ஆலா ஜத்துக வலாயிலாஹா கைருக'' என்ற ஹதிஸ் ஆதரபூர்வமான ஹதிஸ் இல்லை என்று சிலர் கூறுகின்றனர்.. அவர்கள் சொல்வதுமுற்றிலும் தவறு. ஏனென்றால் அன்னை ஆயிசா(ரலி),அனஸ்(ரலி) மற்றும் பல சகாபாக்கள் அவ்ர்கள் அறிவிக்கிறார்கள் நபி(ஸல்) அவர்கள் தொழுகையில் ஆரம்பத்தில் ''சுப்ஹானக்கல்லாஹும்ம வபிஹம்திக வதபாரகஸ்முக வத ஆலா ஜத்துக வலாயிலாஹா கைருக'' அவர்கள் கூறியது சரியானது என்று 225,226 இமாம் திர்மதி(ரஹ்),796 இமாம் இப்னு மஜா அவர்களும்,117/1 இமாம் தஹாவி(ரஹ்), 113 இமாம் தாரகுத்னி(ரஹ்) அவர்களும்,34/2 -ல் இமாம் பைஹக்கீ(ரஹ்),341 இமாம் அல் இர்வாஉ(ரஹ்),815 இமாம் மிஷ்காத்(ரஹ்),749 இமாம் அபூதாவுது(ரஹ்),864 இமாம் நஸயி(ரஹ்)இமாம் தாரகுத்னி(ரஹ்)1141,இமாம் நிமாவி ஹசன் தரப்பிலும்,இமாம் சையது பின் மன்சூர் 2/202,இப்னு அபிஷைபா(ரஹ்) 2391,2393, இமாம் முந்தகீர்(ரஹ்),இமாம் தைமியா(ரஹ்), 2/203 இன்னும் பல இமாம்கள் ஸஹிஹ் வான ஹதிஸ்களில் பதிவு செய்துள்ளார்கள்.

இமாம் ஹாகிம் அல்ஹீதாவில் எனும் நூலில் இவ்வரிசையை சரியானது என பத்வா வழங்கியுள்ளார்கள். இது ஒரு வழியில் வந்தாலும் சரியான தொடரில் வந்துள்ளது என இமாம் திர்மதி(ரஹ்),இமாம் தஹபீ(ரஹ்) அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

அல்லாவுக்கு மிகப்பிரியாமான வார்த்தை என நபி(ஸல்) அவர்கள் அறிவித்தாக அன்ஸ்(ரலி) அறிவிக்கிறார்கள். அவ்வார்த்தை ''சுப்ஹானக்கல்லாஹும்ம வபிஹம்திக வதபாரகஸ்முக வத ஆலா ஜத்துக வலாயிலாஹா கைருக'' தொழுகையில் ஓதும் ஸனவாகும். இதை தவ்ஹீதில் இப்னுமன்தா(ரஹ்) சரியான தொடரில் பதிவு செயதுள்ளார்கள். மேலும் சிலர் உமர்(ரலி) அவர்கள் ஓதியாதாக சில இமாம்கள் ஸஹிஹ்வான ஹதிஸ் என பதிவுசெய்துள்ளார்கள். இதை வைத்து சிலர் உமர்(ரலி) ஓதினது என அலட்சியம் படுத்துகிறார்கள். வெளிப்படையில் இக்கூற்று சரியாகபடலாம்.. ஆனால் நபி(ஸல்) அவர்கள் என்சுன்னத்தையும் எனக்கு பிறகு குலபாயே ராஷீதின்கள் சுன்னத்தையும் பற்றி பிடித்து கொள்ளுங்கள் உங்களது கடைவாய் பற்களால் அவற்றை கடித்து கொள் எனக்கூறினார்கள் (இப்னுமஜா).

தொழுகையின் ஆரம்பத்தில் மட்டும் கையை உயர்த்துவது:
நான் நபி(ஸல்) அவர்கள் தொழுததது போல் உங்களுக்குத் தொழுது காட்டட்டுமா? என்று கூறிய இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் தொழுது காட்டினார்கள், அத்தொழுகையில் முதல் தடவையில் தவிர(வேற எந்த நிலையிலும்) கையை உயர்த்தினது கிடையாது என அல்கமா(ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்
இது குறித்து பராஃ பின் ஆஸிப்(ரலி) அவர்களும் அறிவித்துள்ளார்கள், இது ஹஸன் தரத்திலமைந்த ஹதிஸாகும், நபித்தோழர்கள் மற்றும் தாபியீன்கள் ஏரளமான அறிஞர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள்.
சுஃப்யான் அஸ்ஸவ்ரீ மற்றும் கூஃபாவாசிகள் இக்கருத்துடையவர்கள்.
இமாம் திர்மதி(ரஹ்) - ஹசன் - 238,
இமாம் தஹிஹ் நஸில் அல்பனி(ரஹ்) - ஸஹிஹ் - 809
இமாம் மிஷ்காத்(ரஹ்) - ஸஹிஹ் - 254
இமாம் இப்னு குஸைமா(ரஹ்) - ஸஹிஹ்- 294
இமாம் இப்னு ஹஜ்ம்(ரஹ்) - ஸஹிஹ் - 88
இமாம் நஸப் அல் ரயா(ரஹ்) - ஸஹிஹ் - 526
இமாம் மஜ்ம அல் ஜவயத்(ரஹ்) - ஸஹிஹ் - 101
இமாம் அத்தர்(ரஹ்) - ஸஹிஹ் - 226
இமாம் அபூ ஈஸா(ரஹ்) - ஸஹிஹ்) -
இமாம் நிமவி(ரஹ்) - ஸஹிஹ் - 402, 404
இமாம் அபூயாலா(ரஹ்) - ஸஹிஹ் - 5040 மற்றும் 5302
இமாம் துர்குமனி(ரஹ்) - -ஸஹிஹ் - 113
இமாம் பைஹகி(ரஹ்) - ஸஹிஹ் - 2531, 2535
இமாம் நஸயி(ரஹ்) <-- ஆஸிம் பின் குலைப் - 1016, 1048
ஆஸிம் பின் குலைப்(ரஹ்) ----> பலமானவர் - முஸ்லிம்(ரஹ்)
இமாம் தகவி(ரஹ்) - ஸஹிஹ் - 112, 225
இமாம் முஹதித் தவர் அஹ்மது உத்மானி - ஸஹிஹ் - 814
இமாம் முகம்மது(ரஹ்)- 109
இமாம் இப்னு அபிஷைபா(ரஹ்) 2442
இமாம் இப்னு ஹஜர்(ரஹ்) - ஸஹிஹ் - 113

நான் நபி(ஸல்) அவர்கள் தொழுகையின் ஆரம்பத்தில் கையை காதிற்கு அருகில் வரை உயர்த்தினார்கள், அதன் பிறகு அவர்கள் (தொழுகையின் வேற எந்த நிலையிலும்) கையை உயர்த்தினது கிடையாது என பராஃ பின் ஆஸிப்(ரலி) அவர்களும் அறிவித்துள்ளார்கள்,
இமாம் இப்னு அபிஷைபா(ரஹ்) 2440
இமாம் அபுயாலா(ரஹ்) 1689,1690,1691,1692
இமாம் அபூதாவுத்(ரஹ்) 249
இமாம் தகவி(ரஹ்) 224
இமாம் முஹதித் யூசும் அல் பின்னூரி(ரஹ்) 493

நபி(ஸல்) அவர்கள் தொழுகையின் ஆரம்பத்தில் கையை உயர்த்தினார்கள், அதன் பிறகு அவர்கள் (தொழுகையின் வேற எந்த நிலையிலும்) கையை உயர்த்தினது கிடையாது என அப்துல்லா பின் உமர்(ரலி) அவர்களும் அறிவித்துள்ளார்கள்,
இமாம் பைஹகி(ரஹ்) 1790
இமாம் முஹதித் யூசும் அல் பின்னூரி(ரஹ்) 498
இமாம் நஸப் அல் ரயா(ரஹ்) - ஸஹிஹ் - 496

இமாம் அஸ்வத்(ரஹ்) (தாபியி) நான் உமர் பின் கத்தாப்(ரலி) அவர்களின் பின்னால் தொழுதுள்ளேன் அவர்கள் தொழுகையின் ஆரம்பத்தில் தவிர வேற எந்த நிலையிலும் கையை உயர்த்தவே இல்லை
இமாம் இப்னு அபிஷைபா(ரஹ்) 2454
இமாம் தகவி(ரஹ்) - ஸஹிஹ் - 227
இமாம் துர்குமனி(ரஹ்) - -ஸஹிஹ் - 109
இமாம் இப்னு ஹஜர்(ரஹ்) - ஸஹிஹ் - 113

அப்துல்லா பின் ஜிபைர்(ரலி) அவர்களின் மகன் அப்தா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நபி(ஸல்) அவர்கள் தொழுகையின் ஆரம்பத்தில் மட்டும் கையை உயர்த்துவார்கள், அதன் பிறகு தொழுகை முடியும் வரை வேற எந்த நிலையிலும் கை உயர்த்தினது கிடையாது.
இமாம் பைஹகி(ரஹ்) 1721
இமாம் அல்லமா அன்வர் ஷா காஷ்மிரி(ரஹ்) - ஸஹிஹ் - மஸ்ரிப் அல் சுன்னா - 496

நான் நபி(ஸல்) அவர்களுக்கு பின்னால் தொழுதுள்ளேன், அபுபக்கர்(ரலி) அவர்களுக்கு பின்னால் தொழுதுள்ளேன், உமர்(ரலி) அவர்களுக்கு பின்னால் தொழுதுள்ளேன், அவர்கள் அனைவரும் தொழுகையின் ஆரம்பத்தில் தவிர வேற எந்த நிலையிலும் கையை உயர்த்தினது கிடையாது என இப்னு மஸ்வூது(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இமாம் அஹ்மது(ரஹ்) - ஸஹிஹ்- 3660,3736,4055
இமாம் அபுயாலா(ரஹ்) 5039
இமாம் பைஹகி(ரஹ்) -ஸஹிஹ் - 2534
இமாம் ஹாகிம்(ரஹ்) - ஸஹிஹ்
இமாம் தாரகுத்னி(ரஹ்) 1120

இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் தொழுகையில் முதல் தடவையில் தவிர(வேற எந்த நிலையிலும்) கையை உயர்த்தினது கிடையாது என இப்ராகிம் அல் நகயி(ரஹ்)(தாபியி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இமாம் இப்னு அபிஷைபா(ரஹ்) 2443
இமாம் தகவி(ரஹ்) - ஸஹிஹ் - 227
இமாம் நிமவி(ரஹ்) - ஸஹிஹ்
இமாம் அப்துல் ரஜாக்(ரஹ்) - 2533, 2535

இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களும், அலி(ரலி) அவர்களும் தொழுகையில் முதல் தடவையில் தவிர(வேற எந்த நிலையிலும்) கையை உயர்த்தினது கிடையாது என அபூ இஸாக்(ரஹ்)(தாபியி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இமாம் துர்குமனி(ரஹ்) - -ஸஹிஹ் - 115
இமாம் இப்னு அபிஷைபா(ரஹ்) 2446

தொழுகையில் பிஸ்மில்லாஹ்வை சப்தமின்றி ஓதுதல்:
தொழுகையில் பிஸ்லில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்று ஓதுவதை என் தந்தை செவியுற்றார், அப்போது என் அருமை மகனே! இது (நபி(ஸல்) அவர்களுக்களின் காலத்திற்கு பின்னால்) உருவாக்கப்பட்டதாகும், (மார்க்கத்தில்) இவ்வாறு (புதியவைகளை) உருவாக்குவதை விட்டும் உன்னை எச்சரிக்கிறேன் என்றார்கள், நபித் தோழர்களில் என் தந்தை அளவுக்கு இஸ்லாத்தில் புதியதாக உருவாக்குவதை வெறுக்கும் எவரையும் நான் கண்டதில்லை, மேலும் எனது தந்தை தொடர்ந்து, அபூபக்கர்(ரலி), உமர்(ரலி), உஸ்மான்(ரலி) ஆகியோருடனும் தொழுதுள்ளேன், அவர்களில் எவருமே அதை(பிஸ்மில்லாவை சப்தமாக) கூற நான் செவியுற்றதில்லை, நீ தொழும்போது அதை கூறாதே! அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் என்றே கூறுவாயாக என கூறினார்கள் இதை அப்துல்லாஹ் பின் முகஃப்பல்(ரலி) அவர்களின் மகன் அறிவிக்கிறார்கள்.(இமாம் திர்மதி(ரஹ்)227)
இமாம் திர்மதி(ரஹ்) அவர்கள் ஹசன் தரத்தில் பதிவு செய்துள்ளதால் இதை ஒதுக்கி விட முடியாது.

இமாம் திர்மதி(ரஹ்) அவர்களின் விளக்கம்:
அப்துல்லாஹ் பின் முகஃப்பல்(ரலி) இந்த ஹதிஸ் ஹஸன் தரத்தில் அமைந்தவையாகும். அபூபக்கர்(ரலி),உமர்(ரலி),உஸ்மான்(ரலி), அலி(ரலி) ஆகியோர் உள்ளிட்ட நபித்தோழர்களிலும், அவர்களை அடுத்து வந்த தாபீன்களிலும் உள்ள அதிகமான அறிஞர்கள் இதனடிப்படையிலேயே செயல்பட்டுள்ளனர்கள்,
ஸுஃப்யான் அஸ்ஸப்ரீ(ரஹ்), இப்னுல் முபாரக்(ரஹ்), அஹ்மத்(ரஹ்), இஸ்ஹாக்(ரஹ்) ஆகியோர்களும் பிஸ்லில்லாஹிர் ரஹ்மானிர் ரஹிம் என்பதை சப்தமாக கூறாமல் மனதுக்குள் கூறவேண்டும் எனக் கருதுகின்றார்கள்.

அனஸ்(ரலி) அவர்கள் அறிவிப்பதாவது நான் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுக்கு பின்னாலும், அபூபக்கர்(ரலி),உமர்(ரலி),உஸ்மான்(ரலி) ஆகியோருக்கு பின்னாலும் தொழுதிருக்கிறேன் (ஆனால்) அவர்களுல் யாரிடமும் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் உரத்து கூறியதை நான் செவியுற்றதில்லை.(இமாம் முஸ்லிம்(ரஹ்) 667, இமாம் அஹ்மது(ரஹ்) 13284, இமாம் நஸயி(ரஹ்) 897,)
மேலுள்ள மூன்று ஹதிஸ் கிரததந்தகளிலும் ஸஹிஹ் வான தரத்தில் இந்த ஹதிஸ் அமைந்துள்ளது.

ஃபாத்திஹா அத்தியாயம் இன்றி தொழுகையில்லை:
திருகுரானின் தோற்றுவாயை(அல்ஹம்து சூராவை) ஓதாவதருக்கு எந்த தொழுகையும் இல்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உபாதாதா பின் அஸ் ஸாமித்(ரலி) அறிவிக்கிறார்கள்,

இது குறித்து அபூஹீரைரா(ரலி), ஆயிசா(ரலி), அனஸ்(ரலி), அபூகாதா(ரலி), அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) ஆகியோரும் அறிவித்துள்ளார்கள், உபாதா(ரலி) அறிவிக்கிம் ஹதிஸ் ஹசன் ஸஹிஹ் எனும் தரத்தலமைந்தவாகும். உமர் பின் அல் கத்தாப்(ரலி), அலி பின் அபீதாலிப்(ரலி), ஜாபர் பின் அப்துல்லா(ரலி),இம்ரான் பின் ஹுசன்(ரலி) உள்ளிட்ட நபித்தோழர்களில் அநேகர் இதனடிப்படையில் செயல்பட்டுள்ளனர். இப்னுல் முபாரக்(ரஹ்), ஷாஃபி(ரஹ்), அஹ்மத்(ரஹ்), இஸ்ஹாக்(ரஹ்) ஆகியோரும் இவ்வாறே கூறுகின்றனர்கள்.ஃபாத்திஹா அத்தியாயம் ஓதப்படாத எந்த தொழுகையும் முழுமை பெறாத்தும் குறையுடையதும் ஆகும் என்று அலி(ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்

'குர்ஆன் ஓதப்படும்போது அதனை நீங்கள் செவிதாழ்த்தி (கவனமாகக்) கேளுங்கள்; அப்பொழுது நிசப்தமாக இருங்கள் - (இதனால்) நீங்கள் கிருபை செய்யப்படுவீர்கள்'. (அல்குர்ஆன் 7:204)

இப்னு மஸ்வூது (ரலி) அவர்கள் தொழவைத்த போது இமாமுடன் மக்களும் ஓதுவதை செவியுற்றார்கள். தொழுது முடிந்த பின் 'குர்ஆன் ஓதப்பட்டால் செவிதாழ்த்திக் கேளுங்கள்! வாய் மூடி இருங்கள்' என்ற குர்ஆன் வசனத்தை நீங்கள் விளங்க வேண்டாமா? அதை சிந்திக்க வேண்டாமா? என்று கேட்டார்கள். (அறிவிப்பவர்: பஷீர் இப்னு ஜாபிர், நூல்: தபரி)

இமாம் பின்பற்றுவதற்காகவே நியமிக்கப்படுகிறார்,ஆகவே அவர் தக்பீர்(அல்லாஹு அக்பர்) கூறினால் நீங்களும் தக்பீர்(அல்லாஹு அக்பர்) கூறுங்கள்! அவர் ஓதும்போது, வாய் மூடி (செவிதாழ்த்தி) கேளுங்கள்; அவர் சமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று கூறும் போது, அல்லாஹும்ம ரப்பனா லகல் ஹம்து! எனக் கூறுங்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இமாம்(தொழுகையை தலைமையேற்று நடத்தும்) பின்பற்றுவதற்காகவே உள்ளார்கள், ஆகவே அவர் தக்பீர்(அல்லாஹு அக்பர்) கூறினால் நீங்களும் தக்பீர்(அல்லாஹு அக்பர்) கூறுங்கள்! அவர் ஓதும்போது, வாய் மூடி (செவிதாழ்த்தி) கேளுங்கள். என அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் என அபூஅப்திர்ரஹ்மான்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
(அறிவிப்பாளர்களுள் ஒருவரான முகம்மது பின் ச அது அல் அன்சாரி(ரஹ்) அவர்கள் நம்பகமான அறிவிப்பாளர் ஆவார் என்று (எனக்கு அறிவித்த) முகம்மது பின் அப்துல்லா பின் முபாரக அல்ம்கரமீ(ரஹ்) அவர்கள் கூறிவந்திருக்கிறார்கள்.
இமாம் நஸயி(ரஹ்) 912,913,இமாம் இப்னுமஜா(ரஹ்) 837, இமாம் அபூதாவுத்(ரஹ்) 701,702,இமாம் அஹ்மது(ரஹ்) 8534,9069.

நபி (ஸல்) அவர்கள் உரத்து ஓதம் ஒரு தொழுகையை முடித்ததும்(மக்களை நோக்கி,சற்று முன்னர் உங்களில் எவரேனும் என்னுடன் சேர்ந்து ஓதினீர்களா? என்று கேட்டார்கள். அப்போது ஒருவர், 'அல்லாஹ்வின் தூதரே! ஆம்' என்றார்கள். 'அல்லாவின் தூதர்(ஸல்) அவர்கள் நான் குர் ஆன் ஓதுவதற்கு குறுக்கீடு செய்யப்படுகின்றதே! என்ன காரணம்? என எண்ணினேன். என்று சொன்னார்கள். இவ்வாறு கூறியதை கேட்டதிலிருந்து நபி (ஸல்) அவர்கள் சப்தமிட்டு ஓதும் ரக்அத்துகளில் மக்கள் ஓதுவதை கைவிட்டுவிட்டனர் என்று அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள். இமாம் அபூதாவூது(ரஹ்)781,782, இமாம் திர்மிதி(ரஹ்) 287, இமாம் மாலிக்(ரஹ்) முஅத்தா 179, இமாம் அஹ்மத்(ரஹ்)7485,7665, இமாம் இப்னுமாஜா(ரஹ்), இப்னு ஹிப்பான்,இமாம் நஸயி(ரஹ்)910,இமாம் மிஷ்காத்(ரஹ்) 855)

யார் இமாமை பின்பற்றும் போது தவிர மற்ற சமயங்களில் ஃபாத்திஹா ஓதவில்லையோ அவர் தொழவில்லை என்று ஜாபிர்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்,
இமாம் திர்மதி(ரஹ்) - ஹசன் ஸஹிஹ் - 288
இமாம் மாலிக்(ரஹ்) - ஸஹிஹ் - 184
இமாம் சப்தமிட்டு ஓதாத தொழுகையில் இமாமுக்கு பின்னால் ஒதுவது:
இமாம் சப்தமிட்டு ஓதாத தொழுகையில் இமாமுக்கு பின்னால் (தொழுதால் என் தந்தை) உர்வா(ரஹ்) அவர்கள் (அல்ஃபாத்திஹா) ஓதுவார்கள். இமாம் மாலிக்(ரஹ்) - 186

இமாம் சப்தமிட்டு ஓதாத தொழுகையில் இமாமுக்கு பின்னால் காஸிம் இப்னு முகம்மது(ரஹ்) அவர்கள் (அல்ஃபாத்திஹா) ஓதுவார்கள் என ரபீஆ இப்னு அபூ அப்துர் ரஹ்மான்(ரஹ்) கூறுகிறார்கள்.இமாம் மாலிக்(ரஹ்) - 187

இமாம் சப்தமிட்டு ஓதாத தொழுகையில் இமாமுக்கு பின்னால் நாபிஉ இபுனு ஜுபைர் இப்னு முத் இம்(ரஹ்) அவர்கள் (அல்ஃபாத்திஹா) ஓதுவார்கள் என யஜித் இப்னு ரூமான்(ரஹ்) கூறுகிறார்கள் இமாம் மாலிக்(ரஹ்) - 186

நான் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம், அபூஹுரைரா(ரலி) அவர்களே,நான் சில நேரங்கள் இமாமுக்குப் பின்னால் தொழுது கொண்டிருக்கிறேன் (அல் ஃபாத்திஹா அப்போதும் ஓத வேண்டுமா)? என்று கேட்டேன். அதற்கு (அபூஹுரைரா (ரலி)) அவர்கள் எனது முழங்கையில் விரலால் குத்தி, பாரசீகரே! َஅதை உங்களுடைய மனதுக்குள் ஓதிக் கொள்ளுங்கள்'.

ஏனெளில் அல்லாஹ் கூறுவதாக பின்வரும் செய்தியை நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றுள்ளேன். தொழுகைய்(இல் ஓதப்படும் அல் ஃபாத்திஹா அத்தியாத்தை) எனக்கும் என் அடியானுக்குமிடையே(துதித்தல்,பிரார்த்தித்தல்) இரண்டு பகுதிகளாக பிரித்துள்ளேன். அதில் ஒரு பகுதி (துதித்தல்)எனக்குரியது. இன்னொரு பகுதி(பிரார்த்தித்தல்)என் அடியானுக்குரியது. என் அடியான் கேட்டது அவனுக்கு கிடைக்கும்' என்று அல்லாஹ் கூறுகிறான்.

அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் என்று அடியான் கூறும்போது என் அடியான் என்னைப் புகழ்கிறான் என்று அல்லாஹ் கூறுகிறான். அர்ரஹ்மானிர்ரஹீம் என்று கூறும் போது என்னை என் அடியான் பாராட்டி விட்டான் என்று இறைவன் கூறுகிறான்.
மாலிகி எவ்மித்தீன் என்று அடியான் கூறும் போது என் அடியான் என்னை மகத்துவப்படுத்தி விட்டான் என்று இறைவன் கூறுகிறான்.
இய்யாக நஃபுது வஇய்யாக நஸ்தயீன் என்று கூறும் போது இது எனக்கும் என் அடியானுக்கும் உள்ள உறவாகும், என் அடியான் கேட்டது அவனுக்கு உண்டு என்று இறைவன் கூறுகிறான்.
இஹ்தினஸ்ஸிராதல் முஸ்தகீம், சிராதல்லதீன அன்அம்த அலைஹிம், கைரில் மக்லூபி அலைஹிம் வலள்ளால்லீன் என்று அடியான் கூறும் போது இவையாவும் என் அடியானுக்கு உரியதாகும். அவன் கேட்டது அவனுக்கு உண்டு என்று இறைவன் கூறுகிறான்.
இதை அபுஸ்ஸாயிப் என்பார் அறிவிக்கிறார். (நூல்கள்: முஸ்லிம் 655, நஸயி 895)

இமாமுக்கு பின்னால் தொழுபவர் ஓதாலாமா? எனக் கேட்டால், உங்களில் ஒருவர் இமாமுக்கு பின்னால் தொழுதால் அவருக்கு இமாமின் கிராத்தே போதுமானதாகும். தனித்து தொழுதால் அவர் ஓதட்டும் என்று அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுவார்கள். மேலும் அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் இமாம்க்கு பின்னால் தொழுதால் ஓதமாட்டார்கள் என நாபிஉ(ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.
இமாம் மாலிக்(ரஹ்) - ஸஹிஹ் - 189
இமாம் ஆதாருஸ் சுனன்(ரஹ்) - ஸஹிஹ் - 89

இமாமுக்கு பின்னே அவர் சப்தமிட்டு ஓதாத தொழுகையை ஒருவர் சேர்ந்தால் அவர் ஓத வெண்டும். சப்தமிட்டு தொழும் தொழுகையில் ஓதுவதை விட்டுவிட வேண்டும் என்பதே எம்மிட்ம் உள்ள சட்டமாகும் என மாலிக்(ரஹ்) அவர்கள் கூறி கேட்டதாக எஹ்யா(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் இமாம் தக்பீர் கூறினால் நீங்களும் தக்பீர் கூறுங்கள், அவர் கிராஅத் ஓதினால் நீங்கள் வாய் மூடியிருங்கள் அபூமூஸல் அஷ்அரீ(ரலி) அறுவிக்கிறார்கள்(ஹதிஸின் சுருக்கம்)(இமாம் முஸ்லிம்(ரஹ்) - 800)
யாருக்கு இமாம் இருந்தாரோ, அந்த இமாமின் கிராத்(அல்ஃபாத்திஹா), அந்த இமாமின் கிராத்(அல்ஃபாத்திஹா), பின் தொழும் ம உமூமுக்கு கிராத்(அல்ஃபாத்திஹா, போதுமானதாகும் என இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்,
இமாம் பைகஹி(ரஹ்) - ஸஹிஹ்

யாருக்கு இமாம் இருந்தாரோ, அந்த இமாமின் கிராத்(அல்ஃபாத்திஹா), அந்த இமாமின் கிராத்(அல்ஃபாத்திஹா), பின் தொழும் ம உமூமுக்கு கிராத்(அல்ஃபாத்திஹா), போதுமானதாகும் என அப்துல்லா பின் ஷத்தாத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், இமாம் தாரகுத்னி(ரஹ்)

தொழும் போது இரண்டு சந்தர்ப்பங்களில் மவுனமாக இருத்தல்:
நபி(ஸல்) அவர்கள் இரண்டு சந்தர்பங்களில் மவுனமாக இருந்ததை நான் அறிந்துள்ளேன் என்று ஸமுரா(ரலி) கூறினார்கள், அதை இம்ரான் பின் ஹிசைன்(ரலி) ம்றுத்து ஒரு சந்தர்ப்பத்தில் மவுனமாக இருப்பார்கள் என்று தான் நான் அறிந்துள்ளேன் என்றார்கள், மதினாவிலிருந்த உபை பின் க அபு(ரலி) அவர்களுக்கு நாங்கள் எழுதி கேட்ட போது ஸமுரா(ரலி) அவர்கள் அறிவித்திருப்பதே சரியானது என்று பதில் எழுதினார்கள், இதை ஸமுரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

நான் கததா(ரஹ்)விடம் அந்த இரு சந்தர்ப்பங்கள் யாவை? எனக் கேட்டேன், அதற்கவர் முதல் சந்தர்ப்பம் தொழுகையை துவக்கியுடன், மற்றொரு சந்தர்ப்பம் கிராஅத் அதாவது வலாள்ளால்லீன் முடித்தவுடன் என்று விடையளித்தார், ஓதி முடித்தவுடன் மூச்சை ஆசுவாசப்படுத்திக் கொள்ள்வதற்காக மவுனமாக இருப்பது அவர்களுக்கு பிடித்தமானதாகவும் இருந்தது என்று ஸயித்(ரஹ்) அவர்கள் கூறினார்கள். இது குறித்து அபூஹீரைரா(ரலி) அவர்களும் அறிவித்துள்ளார்கள், ஸமுரா(ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதிஸ் ஹஸன் தரத்திலமைந்தவையாகும், அநேக அறிஞர்கள் தொழுகையை துவங்கிய போதும், அல்ஹம்து(சூரா) ஓதி முடித்த பிறகும் இமாம் சற்று நேரம் மவுனமாக இருப்பது விரும்பதக்கதாகும், நமது சகாக்களும் இவ்வாறே கூறுகின்றனர்கள்.
இமாம் திர்மதி(ரஹ்) - 233

ருகூவின் போதும், ஸஜ்தாவின் போதும் தக்பீர் கூறுதல்:
நபி(ஸல்) அவர்களும், அபூபக்கர்(ரலி),உமர்(ரலி) ஆகியோரும் ஒவ்வொரு உட்காருதலின் போதும், நிற்கும் போது, குனியும் போதும், தக்பீர் கூறுபவர்களாக இருந்தார்கள் என அப்துல்லா பின் மஸ்வூத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இது குறித்து அபூஹீரைரா(ரலி), அனஸ்(ரலி), இப்னு உமர்(ரலி), அபூமாலிக்(ரலி), அபூமுஸா(ரலி).இம்ரான் பின் ஹிசைன்(ரலி), வாயில் பின் ஹீஜ்ர்(ரலி) அவர்களும் அறிவித்துள்ளார்கள். அப்துல்லா பின் மஸ்வூத்(ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதிஸ் ஹசன் ஸஹிஹ் எனும் தரத்தலைமைந்தவாகும். அபூபக்கர்(ரலி),உமர்(ரலி), உஸ்மான்(ரலி), அலி(ரலி) ஆகீயோர் உள்ளடங்கிய நபித்தோழர்கள், சட்ட மேதைகள் தாபீன்கள் மற்றும் அறிஞர்கள் பெரும்பாலோர் இதனடிப்படையில் செயல்பட்டுள்ளார்கள்.
இமாம் திர்மதி(ரஹ்) – 235

தொழுகையில் ஆமின் மெதுவாக கூறுவது:
ஆகவே, முஃமின்களே!) உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும், அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள் - வரம்பு மீறியவர்கவளை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை. (7:55)

(நபியே!) நீர் உம் மனதிற்குள் மிக்க பணிவோடும், அச்சத்தோடும் (மெதுவாக) உரத்த சப்தமின்றி காலையிலும், மாலையிலும் உம் இறைவனின் (திருநாமத்தை) திக்ரு செய்து கொண்டு இருப்பீராக! (அவனை) மறந்து விட்டிருப்போரில் ஒருவராக நீர் இருக்க வேண்டாம். (7:205)

இமாம் கைருல் மக்லூபி அலைஹிம் வலள்ளல்லீன் என்று கூறும் போது நீங்கள் ஆமீன் கூறுங்கள்! ஏனெனில் எவர் கூறும் ஆமீன் மலக்குகள் கூறும் ஆமீனுடன் ஒத்து அமைந்து விடுகின்றதோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப் படுகின்றன என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹீரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்(இமாம் புகாரி(ரஹ்) 680), இமாம் முஸ்லிம்(ரஹ்), இமாம் திர்மதி(ரஹ்) 232)

நபி(ஸல்)அவர்கள் கைருல் மக்லூபி அலைஹிம் வலள்ளல்லீன் என்று ஓதியதும் ஆமீன் என்று கூறுவார்கள், அதை மெதுவாக தமது குரலில் கூறுவார்கள் என வாயில் பின் ஹிஜ்ர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இமாம் திர்மதி(ரஹ்) 231,இமாம் ஹாகிம்(ரஹ்) 2913, இமாம் பைஹகி(ரஹ்) 2447, இமாம் அஹ்மத்(ரஹ்) 18363,இமாம் அபுதாவுத்(ரஹ்) 1024, இமாம் தாரகுத்னி 1256, இமாம் தப்ரானி(ரஹ்) 109)

இந்த ஹதிஸ் இமாம் ஹாகிம்(ரஹ்) அவர்கள் ஸஹிஹ்வான தரத்தில் பதிவு செய்துள்ளார்கள், அதை இமாம் தஹபி(ரஹ்) அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளார்கள்.

இதை ஷுஅபா(ரஹ்) அவர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது என இமாம் திர்மதி(ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்,

மேலும் இமாம் திர்மதி(ரஹ்), இமாம் புகாரி(ரஹ்) அவர்களிடம் சப்தத்தை உயர்த்துவார்கள் என்பதை மெதுவாக கூறுவார்கள் என்று செவியுற்றுள்ளேன் என்று கூறியுள்ளார்கள்.

அப்துல்லா பின் மஸ்வூத்(ரலி) மற்றும் அலி(ரலி) அவர்களும் (தொழுகையில்) சப்தமாக பிஸ்லில்லா, ஆமீன்(மெதுவாக கூறுவார்கள்)சப்தமாக கூறமாட்டார்கள் என அபூவாயில்(ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(இமாம் தப்ரானி(ரஹ்) 108, இமாம் அஹ்மத் உத்மானி(ரஹ்) 250)

இமாம் தப்ரானி(ரஹ்) அவர்கள் இந்த ஹதிஸ் சரியான தொடரில் அமைந்துள்ளது என அறிவித்துள்ளார்கள், இதில் வரும் அறிவிப்பாளர் சரியானவர்கள் என்றும் தொகுத்துள்ளார்கள்,

மேலும் இமாம் அஹ்மத் உத்மானி(ரஹ்) அவர்களும் இதை ஸஹிஹ் வான தரத்தில் பதிவு செய்துள்ளார்கள்.

இப்னு உமர்(ரலி) மற்றும் அலி(ரலி) அவர்களும் (தொழுகையில்) சப்தமாக பிஸ்லில்லா, ஆமீன்(மெதுவாக கூறுவார்கள்)சப்தமாக கூறமாட்டார்கள் என அபூவாயில்(ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(இமாம் இப்னு அல் துர்குமனி(ரஹ்) 2/70, இமாம் தஹவி(ரஹ்) 204, இமாம் அஹ்மத் உத்மானி(ரஹ்))

இமாம் அல் துர்குமனி(ரஹ்) அவர்கள் பெரும்பலான சகபாக்கள்(ரலி) மற்றும் தாபின்கள்(ரலி) அவர்களும் இதனடிப்படையில் செயல்பட்டுள்ளார்கள்.

ஸஜ்தா செய்யும் போது கைகளை வைப்பதற்கு முன்னால் முட்டுகால்களை வைப்பது:
நபி(ஸல்) அவர்கள் ஸஜ்தா செய்யும் போது கைகளுக்கு முன்பாக மூட்டுகால்களை(த் தரையில்) வைப்பார்கள், ஸஜ்தாவிலிருந்து எழும்போது மூட்டுகால்களுக்கு முன்பாக கைகளை உயர்த்துவார்கள் என வாயில் பின் ஹுஜ்ர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
இமாம் திர்மதி(ரஹ்) - ஹசன் கரிப் - 248
இமாம் அபூதாவுத்(ரஹ்) - 713
இமாம் இப்னுமஜா(ரஹ்) - 872
இமாம் தாரிமி(ரஹ்) - 1286
இமாம் ஹாகிம்(ரஹ்) - -ஸஹிஹ் - 822 மற்றும் இமாம் தஹபி(ரஹ்) அவர்களும் ஒப்புதல் அளித்துள்ளார்கள்.
இமாம் பைஹகி(ரஹ்) - 2628
இமாம் நஸயி(ரஹ்) - 1077
இமாம் இப்னுஹிப்பான்(ரஹ்) - 1909
இமாம் பகவி(ரஹ்) - 133
இமாம் இப்னுகுஸைமா(ரஹ்) - 626
இமாம் தஹவி(ரஹ்) - 255
ஹாபிள் பின் ஹஜ்ர்(ரஹ்) - ஸஹிஹ் – 254

நான் நபி(ஸல்) அவர்கள் தொழுததை பார்த்துள்ளேன், நபி(ஸல்) அவர்கள் தக்பீர் கூறி, கட்டைவிரலை காது அருகில் உயர்த்துவார்கள்,(அதன் பிறகு) நபி(ஸல்) அவர்களின் முதுகு சமமாக ஆகும் வரை ருகூ செய்வார்கள், அதன் பிறகு தக்பீர் கூறி ஸஜ்தா செய்வார்கள், (அப்பொழுது) நபி(ஸல்) (தரையில்) கை வைப்பதற்கு முன் தனது முட்டுகால்களை தரையில் வைப்பார்கள் என அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இமாம் ஹாகிம்(ரஹ்) - -ஸஹிஹ் - மற்றும் இமாம் தஹபி(ரஹ்) அவர்களும் ஒப்புதல் அளித்துள்ளார்கள், மேலும் இமாம் பைஹகி(ரஹ்) - 2632,
மேலும் இமாம் இப்னு அல் ஜவ்ஸி(ரஹ்) 1/287 அவர்களும் இத்தொடர் ஆதரபூர்வமானதில் அறிவிக்கிறார்கள்

உங்களில் ஒருவர் ஸஜ்தாச் செய்யும் போது தனது கைகளை வைப்பதற்கு முன் தனது மூட்டுக் கால்களை வைக்கட்டும். ஒட்டகம் அமர்வது போல் அமர வேண்டாம்.'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி­)அறிவிக்கிறார்கள்.
இமாம் இப்னு அபிஷைபா(ரஹ்) 2702

அஸ்வத்(ரஹ்),இப்ராஹிம் அல் நகயி(ரஹ்) மற்றும் அல்கமா(ரஹ்)(தாபின்களில் மிகவும் நம்பகமானவர்,முதன்மையானவர்) அவர்கள் அறிவிக்கிறார்கள், உமர்(ரலி) அவர்கள் ஸஜ்தா செய்யும் போது கைகளுக்கு முன்பாக மூட்டுகால்களை(த் தரையில்) வைப்பார்கள்,
இமாம் தஹவி(ரஹ்)- ஸஹிஹ் - 256
இமாம் நமவி(ரஹ்) - ஸஹிஹ் - 432

இப்ராஹிம் அல் நகயி(ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள், இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் ஸஜ்தா செய்யும் போது கைகளுக்கு முன்பாக மூட்டுகால்களை(த் தரையில்) வைப்பார்கள்,
இமாம் அஹ்மது உத்மானி(ரஹ்) - ஸஹிஹ் - 3/35

முஹ்ரீத்(ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள், நான் இப்ராஹிம் அல் நகயி(ரஹ்) அவர்களிடம் கேட்டேன்(தாபின்களில் மிகவும் நம்பகமானவர்,முதன்மையானவர்) ஒரு மனிதன் தொழுகையில் ஸஜ்தாவில் செல்லும் போது மூட்டுகால்கள் வைப்பதற்கு முன் தனது கைகளை வைக்கின்றான் அவர்களை பற்றி கூறுங்கள் எனக் கேட்டேன், அதற்கு இப்ராஹிம் அல் நகயி(ரஹ்) அவர்கள் அறிவில்லாதவன் அல்லது பைத்தியகாரன் தான் அது போல் செய்வான் என பதலளித்தார்கள்.
இமாம் இப்னு அபிஷைபா(ரஹ்)- ஸஹிஹ் 2707
இமாம் அப்துர் ரஜாக்(ரஹ்) - ஸஹிஹ் - 2956,2957
இமாம் தஹவி(ரஹ்)- ஸஹிஹ் - 256
இமாம் அஹ்மது உத்மானி(ரஹ்) - ஸஹிஹ் - 3/35

ருகூவிலும் ஸஜ்தாவிலும் ஓத வேண்டியவை:
உங்களில் எவரேனும் ருகூ செய்யும் போது சுப்ஹான ரப்பியல் அளிம் என்று மூன்று தடவை கூறினால் அவரது ருகூ முழுமை பெற்று விட்டது. இது தான் குறைந்த அளவாகும்.ஸஜ்தா செய்யும் போது தனது ஸஜ்தாவில் சுப்ஹான ரப்பியல் அஃலா என்று மூன்று தடவி கூறினால் அவரது ஸஜ்தா முழுமை பெற்றுவிட்டது, இதுவே குறைந்த அளவாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இப்னுமஜா(ரஹ்) - 880
அபூதாவுத்(ரஹ்) - 752
திர்மதி(ரஹ்) - 242

நபி(ஸல்) அவர்கள் முன்றுமுறை சுப்ஹான ரப்பியல் அளிம் என்று ருகூவிலும், முன்றுமுறை சுப்ஹான ரப்பியல் அஃலா என்று ஸஜ்தா செய்யும் போது தனது ஸஜ்தாவில் ஓதக் கூடியவர்களாக இருந்தார்கள் என ஜுபைர் பின்மதம்(ரலி), அபூபக்ரா(ரலி),ஹீதைபா(ரலி) அறிவிக்கிறார்கள்.
இமாம் தாரகுத்னி(ரஹ்),
இமாம் முஸ்னத பஜ்ஜார்(ரஹ்),

நபி(ஸல்) அவர்கள் முன்றுமுறை சுப்ஹான ரப்பியல் அளிம் என்று ருகூவிலும், முன்றுமுறை சுப்ஹான ரப்பியல் அஃலா என்று ஸஜ்தா செய்யும் போது தனது ஸஜ்தாவில் ஓதக் கூடியவர்களாக இருந்தார்கள் என ஹுதைபா(ரலி) அறிவிக்கிறார்கள்.
இமாம் தாரகுத்னி(ரஹ்),
இமாம் இப்னு குஜைமா(ரஹ்) - ஸஹிஹ்
இமாம் இப்னுமஜா(ரஹ்) - 878

நபி(ஸல்) அவர்கள் முன்றுமுறை சுப்ஹான ரப்பியல் அளிம் என்று ருகூவிலும், முன்றுமுறை சுப்ஹான ரப்பியல் அஃலா என்று ஸஜ்தா செய்யும் போது தனது ஸஜ்தாவில் ஓதக் கூடியவர்களாக இருந்தார்கள் என அபூபக்ரா(ரலி) அறிவிக்கிறார்கள்.
இமாம் முஸ்னத பஜ்ஜார்(ரஹ்),

ருகூவிலிருந்து எழுந்து பின் கூற வேண்டியவை:
இமாம் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா எனக் கூறும் போது ரப்பனா வலக்கல் ஹம்து என்று கூறுங்கள், எவரது சொல் வானவர்களின் சொல்லுடன் பொருந்துகிறதோ, அவரது முன்பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இமாம் திர்மதி(ரஹ்) - 247- ஹசன் ஸஹிஹ்
இமாம் இப்னுமஜா(ரஹ்) - 715 - ஸஹிஹ்
இமாம் அபூதாவுத்(ரஹ்) - 722 - ஸஹிஹ்
இமாம் புகாரி(ரஹ்) - 789 - ஸஹிஹ்
இமாம் முஸ்லிம்(ரஹ்) - 688 - ஸஹிஹ்
இமாம் அஹ்மது(ரஹ்) - 8654 - ஸஹிஹ்
இமாம் நஸயி(ரஹ்) - 1053 - ஸஹிஹ்
இமாம் மாலிக்(ரஹ்) - 183 - ஸஹிஹ்

நான் என் தந்தை சஅது பின் அபீவக்காஸ்(ரலி) அவர்களுக்கு அருகொல் தொழுதேன். அப்போது(ருகூவில்) என் இரு கைகளையும் என் இரு முழங்கால் மூட்டுகால்களுக்கு வைத்தேன், அப்போது அவர்கள் உன் இரு உள்ளங்கைகளையும் உன் முழங்கால் மூட்டுகள் மீது வை என்று கூறினார்கள். பின்னர் மற்றொரு தடவை அவ்வாறு செய்தேன்.உடனே அவர்கள் என் கையை தட்டிவிட்டு, இது எங்களுக்கு தடுக்கப்பட்டு, முழங்கால் முட்டுகள் மீது உள்ளங்கைகளை வைக்குமாறு கட்டளையிடப்பட்டது. என்று கூறினார்கள் என முஸ்அப் பின் சஅது பின் அபீவக்காஸ்(ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இமாம் திர்மதி(ரஹ்) - 240
இமாம் இப்னுமஜா(ரஹ்) - 863
இமாம் அபூதாவுத்(ரஹ்) - 734
இமாம் புகாரி(ரஹ்) - 790
இமாம் முஸ்லிம்(ரஹ்) - 933
இமாம் அஹ்மது(ரஹ்) - 1487,1492
இமாம் நஸயி(ரஹ்) - 1022,1023
இமாம் தாரிமி(ரஹ்) - 1270

(ருகூவில்) முழுங்கால் முட்டுகளை பிடித்து கொள்வது உங்களுக்கு நபியின் சுன்னதாக ஆக்கப்பட்டுள்ளது, ஆகவே (ருகூவில்) முழங்கால் மூட்டுகளை பிடித்து கொள்ளுங்கள் என உமர் பின் அல்கத்தாப்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இமாம் நஸயி(ரஹ்) - 1024,1025
இமாம் திர்மதி(ரஹ்) - 239

ருகூவில், ஸஜ்தாவிலும் நடுநிலை பேணல்:
நபி(ஸல்) அவர்கள் (தொழுகையின்) குனியும் போது,(தலையையும்,முதுகையையும்) சரிசமமாக வைப்பார்கள், தமது தலையை உயர்த்தியோ, தாழ்த்தியோ வைக்கமாட்டார்கள், கைகளை முழங்கால் மூட்டுகளின் மீது வைப்பார்கள் என அபூஹீமைது அஸ்ஸாஇதீ(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இமாம் திர்மதி(ரஹ்) - 280
இமாம் இப்னுமஜா(ரஹ்) - 1051
இமாம் அபூதாவுத்(ரஹ்) - 627
இமாம் புகாரி(ரஹ்) - 828
இமாம் அஹ்மது(ரஹ்) - 22493
இமாம் நஸயி(ரஹ்) - 1029
இமாம் தாரிமி(ரஹ்) - 1274,1322

நபி(ஸல்) அவர்களின் ருகூகும், ருகூவிலிருந்து தமது தலையை உயர்த்துவதும், அவர்களது ஸஜ்தாவும், இரு ஸஜ்தாக்களுக்கிடையிலான அமர்வும்(ஆகிய அனைத்தும்), ஏறத்தாழ(நேரத்தால்) சம அளவில் அமைந்திருந்தன என பராஉ பின் ஆஸிப்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
இமாம் திர்மதி(ரஹ்) - 258
இமாம் முஸ்லிம்(ரஹ்) - 810
இமாம் அபூதாவுத்(ரஹ்) - 726
இமாம் புகாரி(ரஹ்) - 792 -
இமாம் அஹ்மது(ரஹ்) - 17739,17781
இமாம் நஸயி(ரஹ்) - 1055
இமாம் தாரிமி(ரஹ்) - 1299

முகம் ஸஜ்தா செய்வது போன்று, இரு கைகளும் சஜ்தா செய்கின்றன, உங்களில் ஒருவர் (ஸஜ்தாவில்) முகத்தை வைக்கும் போது, தம்முடைய இரு கைகளையும் வைக்கட்டும், முகத்தை(ஸஜ்தாவிலிருந்து)உயர்த்தும் போது இரு கைகளையும் உயர்த்தி கொள்ளட்டும் என நபி(ஸல்) அவர்கள் அறிவித்தாக இப்னு உமர்(ரலி) அறிவித்தார்கள் என நாஃபிஉ(ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இமாம் அஹ்மது(ரஹ்) - 4272
இமாம் நஸயி(ரஹ்) - 1080
இமாம் அபூதாவுத்(ரஹ்) - 758
இமாம் இப்னு குஜைமா(ரஹ்) - 630

ஸஜ்தா செய்யும் போது ஏழு உறுப்புகள் தரையில் பட வேண்டும்:
அடியான் ஸஜ்தா செய்யும் போது அவனுடைய முகம்(மூக்குடன் நெற்றி) இரு (உள்ளங்)கைகள், இரு முழங்கால்கள், இரு பாதங்க(ளின் நுனிக)ள் ஆகிய ஏழு உறுப்புகள் ஸஜ்தா செய்கின்றன என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இமாம் திர்மதி(ரஹ்) - 252
இமாம் முஸ்லிம்(ரஹ்) - 848
இமாம் அபூதாவுத்(ரஹ்) - 757
இமாம் புகாரி(ரஹ்) - 812
இமாம் அஹ்மது(ரஹ்) - 2526,2641
இமாம் நஸயி(ரஹ்) - 1081,1082
இமாம் இப்னுமஜா - 875

ஸஜ்தாவிலிருந்து எழும் முறை:
நபி(ஸல்) அவர்கள் தொழுகையில் (இரண்டு ஸஜ்தாக்கள்) முடித்து எழும் போது உட்காராமல் நேரடியாக எழுவார்கள் என அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அபூஹுரைரா(ரலி) இந்த ஹதிஸின் அடிப்படையில் மார்க்க அறிஞர்கள் செயல்பட்டுள்ளார்கள் என இமாம் திர்மதி(ரஹ்) அவர்கள் தனது கித்தாபில் பதிவு செய்துள்ளார்கள்.
இமாம் திர்மதி(ரஹ்) - 265

நபி(ஸல்) அவர்கள் தொழுகையில்(இரண்டு ஸஜ்தாக்கள்) முடித்து எழும் போது உட்காராமல் நேரடியாக எழுவார்கள் என அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அபூஹுரைரா(ரலி) இந்த ஹதிஸின் அடிப்படையில் மார்க்க அறிஞர்கள் செயல்பட்டுள்ளார்கள் என இமாம் திர்மதி(ரஹ்) அவர்கள் தனது கித்தாபில் பதிவு செய்துள்ளார்கள்.
இமாம் திர்மதி(ரஹ்) - 265
இமாம் அபூதாவுத்(ரஹ்) - 733,966
இமாம் நிமவி(ரஹ்) - 449 - ஸஹிஹ்
இமாம் பைஹகி(ரஹ்) - 2642
இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) - 1863
இமாம் பகவி(ரஹ்) - 669

நான் நபி(ஸல்) அவர்களின் தோழர்களை பலரை நான் பார்த்திருக்கிறேன், அவர்கள் தொழுகையில் முதல் ரக்கத்திலும், மூன்றாவது ரக்கத்திலும் ஸஜ்தாவிலிருந்து தலையை உயர்த்தும் பொழுது உட்கராமல் நேரடியாக எழுவார்கள் என நுமான் அபு அய்ஸ்(ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்
இமாம் இப்னு அபிஷைபா(ரஹ்) - 3989
இமாம் நிமவி(ரஹ்) - 451 - ஹசன்

நான் அப்துல்லா பின் மஸ்வூத்(ரலி) அவர்களை தொழுகையின் உற்று நோக்கி அவர்களை பார்த்தேன் (ஸஜ்தாவிலிருந்து தலையை) உயர்த்தும் பொழுது உட்கராமல் நேரடியாக எழுந்தார்கள். (மேலும்) அவர்கள் முதல் ரக்கத்திலும், மூன்றாவது ரக்கத்திலும் ஸஜ்தாவிலிருந்து தலையை உயர்த்தும் பொழுது உட்கராமல் நேரடியாக எழுவார்கள். என அப்துல் ரஹ்மான் பின் யஜித்(ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இமாம் அப்துல் ரஜ்ஜாக்(ரஹ்) - 2966 மற்றும் 2967
இமாம் இப்னு அபிஷைபா(ரஹ்) - 2764
இமாம் பைஹகி(ரஹ்) - 2764 - ஸஹிஹ்
இமாம் தப்ரானி(ரஹ்) - 9327

அப்துல்லா பின் ஜுபைர்(ரலி) அவர்கள் தொழுகையில் இரண்டாவது ஸஜ்தாவை முடித்து எழும் போது உட்காராமல் நேரடியாக எழுந்ததை நான் பார்த்தேன் என வஹ்ப் பின் கைசன்(ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். மேலும் அதன் தொடர்ச்சியாக கத்தமா(ரஹ்) மற்றும் நவி(ரஹ்) அவர்களும் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களும்,இப்னு உமர்(ரலி) அவர்கள் தொழுகையில் இரண்டாவது ஸஜ்தாவை முடித்து எழும் போது உட்காராமல் நேரடியாக எழுவார்கள் என அறிவிக்கிறார்கள். அலி(ரலி) அவர்களும், உமர்(ரலி) அவர்கள் மற்றும் அவர்களின் தோழர்களும் அவர்கள் தொழுகையில் (இரண்டாவது) ஸஜ்தாவை முடித்து எழும் போது உட்காராமல் நேரடியாக எழுவார்கள் என உபைத் பின் அபி அல் ஜத்(ரஹ்), ஷஅபி(ரஹ்) அறிவிக்கிறார்கள்.
இமாம் இப்னு அபிஷைபா(ரஹ்) - 3980,3985,3978,3982.
இமாம் அப்துல் ரஜ்ஜாக்(ரஹ்) - 2968

அத்தஹிய்யாத்து இருப்பில் ஓதும் துஆ:
நபி(ஸல்) அவர்கள், நாங்கள் இராண்டவது ரக்அத்தின் (முடிவில் இருப்பில்) அமரும் போது, அத்தஹிய்யாத்து லில்லாஹி வஸ்ஸலவாத்து, வத்தைய்யிபாத்து அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன் நபிய்யு வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன் அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹூ வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வரஸுலுஹூ என்று கூறவேண்டுமென எங்களுக்கு கற்று தந்தார்கள் என அப்துல்லா பின் மஸ்வூத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இமாம் புகாரி(ரஹ்) - 831,835,1202,6230,6265,6328,7381
இமாம் முஸ்லிம்(ரஹ்) - 672
இமாம் திர்மதி(ரஹ்) - 266
இமாம் அபூதாவுத்(ரஹ்) - 825
இமாம் இப்னுமஜா(ரஹ்) - 889
இமாம் நஸயி(ரஹ்) - 1150,1151,1152,1153,1154,1155,1156,1157,1158
இமாம் அஹ்மத்(ரஹ்) - 3724,3892

என்னை கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் சந்தித்து நபி (ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்ற ஒர் அன்பளிப்பை உனக்கு நான் வழங்கட்டுமா? என்று கேட்டார்கள். நான் ஆம் அதை எனக்கு வழங்குங்கள் என்று பதில் சொன்னேன். உடனே அவர்கள் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தங்கள் மீதும் தங்கள் குடும்பத்தார் மீதும் ஸலவாத்து சொல்வது எப்படி? (என்று எங்களுக்குக் கற்றுக் கொடுங்கள்) ஏனெனில் தங்களுக்கு நாங்கள் ஸலாம் சொல்வது எப்படி என்று அல்லாஹ் எங்களுக்கு (தஷஹ்ஹூதில்) கற்றுக் கொடுத்திருக்கின்றான். என்று கேட்டோம். அதற்கு அவர்கள் அல்லாஹும்ம ஸல்லி அலாமுஹம்மதின் வஅலா ஆலிமுஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்றாஹீம வஅலா ஆலி இப்றாஹீம இன்னக ஹமீதுன் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்றாஹீம வஅலா ஆலி இப்றாஹீம இன்னக ஹமீதுன் மஜீத் என்று சொல்லுங்கள் என பதிலளித்தார்கள் என அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்) அறிவிக்கிறார்கள்.
இமாம் புகாரி(ரஹ்) - 3370
இமாம் முஸ்லிம்(ரஹ்) - 683
இமாம் திர்மதி(ரஹ்) - 445
இமாம் அபூதாவுத்(ரஹ்) - 830
இமாம் இப்னுமஜா(ரஹ்) - 894
இமாம் நஸயி(ரஹ்) - 1270,1271,1272
இமாம் தாரிமீ(ரஹ்) - 1308
இமாம் அஹ்மத்(ரஹ்) - 17409,17425,17431

ஒவ்வொரு இருப்பிலும் நபி(ஸல்) அவர்கள் கூற்க்கூடிய முதல் வார்த்தை அத்திஹியாத்து லில்லாஹி என்பதாகவே இருந்தது என ஆயிசா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இமாம் பைஹகீ(ரஹ்)

இருப்பில் இருந்தால், உங்களின் ஒருவரின் முதல் வாக்கியம் அத்தஹிய்யாத்து என இருக்க வேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஹித்தான் பின் அப்துல்லாஹ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
இமாம் நஸயி(ரஹ்) - 1123

அத்தஹிய்யாத் இருப்பில் இருக்கும்போது துஆ(ஷஹாதத்)வின் போது விரலை உயர்த்தி கீழே வைப்பது:
நபி(ஸல்) அவர்கள் அத்தஹிய்யாத் இருப்பில் இருக்கும்போது இரு கைகளையும் இரு தொடைகளில் வைத்து பெரு விரலை அடுத்து இருக்கும் வலது கை விரலை துஆ(ஷஹாதத்) ஓதிய நிலையில் விரலை உயர்த்த கூடியவர்களாக இருந்தார்கள் என இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இமாம் முஸ்லிம்(ரஹ்)
இமாம் அஹமத்(ரஹ்)
இமாம் நஸயி(ரஹ்)

நபி(ஸல்) அவர்கள் இருப்பில் இருக்கும் போது வலது கையின் ஆட்காட்டி விரலால் சமிக்ஞை செய்ததை நான் பார்த்தேன் என வாயில் பின் ஹிஜ்ர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இமாம் முஸ்லிம்(ரஹ்)
இமாம் நஸயி(ரஹ்)

நபி(ஸல்) அவர்கள் தொழுகையில் கடைசியில் அமரும் பொழுது இடது கையை இடது முழங்காலிலும், வலது கையை வலது முழங்காலிலும் வைத்து ஆட்காட்டி விரலை உயர்த்தி நிறுத்தி வைக்கக் கூடியவர்களாக இருந்தார்கள்.
இமாம் தாரமி(ரஹ்)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் தொழுது கொண்டிருக்கும் பொழுது நான் அவர்களிடம் சென்றேன். அப்பொழுது அவர்கள் இடது கையை இடது தொடையில் வைத்து இருந்தார்கள். வலது கையை வலது கையை வலது தொடையில் வைத்து இருந்தார்கள். அப்போது விரல்களை மடக்கி ஆட்காட்டி விரலை நீட்டி வைத்துக் கொண்டு 'இதயங்களை புரட்டிக் கொண்டிருப்பவனே! எனது இதயத்தை உன் மார்க்கத்தின் மீது நிலைப்படுத்தி வைப்பாயாக! என்று பிரார்த்தித்தார்கள்.ஆஸிம பின் குலைப் தனது தந்தை மற்றும் பாட்டன் ஷிஹாப் பின் மஜ்னூன் மூலம் அறிவிக்கிறார்கள்.
ஆதாரம்: திர்மிதி - 2/119.

நபி(ஸல்) அவர்கள் தஷஹ்ஹுது துஆ(ஷஹாதத்) ஓதும் பொழுது தங்களின் இடது கையை இடது தொடை மீதும், வலது கையை வலது தொடை மீதும் வைத்து இருப்பில் (வலக்கையின் ஆட்காட்டி) விரலை உயர்த்தி சமிக்ஞைதான் செய்தார்கள், அசைத்து கொண்டு இருக்கமாட்டார்கள் என இப்னு ஜுபைர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
இமாம் நஸயி(ரஹ்)
இமாம் அபூதாவுத்(ரஹ்)
இமாம் பைஹகி(ரஹ்) - 2786 - ஸஹிஹ்
இமாம் நவவி(ரஹ்) - 3ம் பாகம் 454 - ஸஹிஹ்
இமாம் பகவி(ரஹ்) - 676 - ஸஹிஹ்
இமாம் அபு அவன(ரஹ்) - 2ம் பாகம் 226 - ஸஹிஹ்

அசைக்க மாட்டார்கள் என்ற ஹதீஸ் பற்றி ஆராய்வோம்:
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹஜ்ரத் அப்துல் மலிக் இப்னு அப்துல் அஜீஸ் இப்னு ஜுரைஜ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பற்றி ஹதீஸ் கலை வல்லுனர்கள் பலர் 'இவர் சிறந்த உண்மையாளர்' என்று குறிப்பிட்டிருப்பதுடன், இவர் ஹதீஸ்களை அறிவிக்கும் போது பயன்படுத்தும் வார்த்தைகளை பொறுத்து அதன் தகுதி நிர்ணயிக்கப்படும்' என்று ஹஜ்ரத் யஹ்யா இப்னு ஸயீத் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். உதாரணமாக
1) 'எனக்கு அறிவித்தார்' என்று கூறினால், அவர் நேரடியாகக் கேட்டதைக் குறிப்பதால், அது ஏற்றுக் கொள்ளப்படும்.
2) 'எனக்கு செய்தியாகத் தந்தார்' என்று கூறினால், தான் கேட்ட அறிவிப்பாளரின் கிதாபில் இருந்து படித்துச் சொன்னதை குறிப்பதால் அதுவும் ஏற்றுக் கொள்ளப்படும்.
3) 'சொன்னார்' என்று கூறினால் அவர் அதை நேரடியாகக் கேட்டதைக் குறிக்காது. ஆகவே அந்த ஹதீஸ் ஏற்றுக் கொள்ளப்படாது.

மேற்கூறிய விதிகளின் அடிப்படையிலேயே இமாம் அஹ்மது இப்னு ஹம்பல் ரஹிமஹுல்லாஹ் அவர்களும் இப்னு ஜுரைஹ் ரஹிமஹுல்லாஹ் அவர்களைப் பற்றி கூறியுள்ளார்கள்.

'விரலை அசைக்க மாட்டார்கள்' என்று வரும் ஹதீஸில் 'எனக்கு செய்தியாகத் தந்தார்'(அக்ஃபரனீ) என்ற வார்த்தையைப் பயன் படுத்தி அறிவிக்கும் ஹதீஸ் நஸயீயில் பதிவு செய்யப்பட்டுள்ளது. (பாகம்௧, பக்கம் 187) ஆகவே இந்த ஹதீஸ் ஏற்றுக் கொள்ளத்தக்கது என்பது உறுதியாகி விட்டது.

மேலும் இதே ஹதீஸில் வரும் ஜியாத் இப்னு இஸ்மாயில் ரஹிமஹுல்லாஹ் அவர்களைப் பற்றியும் பார்ப்போம்.
1) இமாம் நஸயீ ; ரஹிமஹுல்லாஹ், அவர்களிடத்தில் எந்த குறையும் இல்லை.
2) இப்னு ஹிப்பான் ; ரஹிமஹுல்லாஹ், நம்பகமான வரிசையில் இடம் பெற்றவர்.
3.) அபூஹாதம் ரஹிமஹுல்லாஹ், இவரின் ஹதீஸ் அங்கீகாரம் பெற்றது. எழுதப்பட வேண்டியது.
4) அலி இப்னு மதனீ ரஹிமஹுல்லாஹ், ஹதீஸ் கலையில் எல்லோருக்கும் அறிமுகமானவர்.
ஆதாரம்:- தஹ்தீபுத்தஹ்தீப், பக்கம் - 305,306. மீஜான், பக்கம் - 413.

மேலும் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் முஹம்மது பின் அஜ்லான் என்பவர் பற்றி மிகப்பெரும் ஹதீஸ் கலை வல்லுனர்கள் மிகவும் பலமானவர்' என்று குறிப்பிடுகிறார்கள். இமாம் நஸயீ, சாலிக் இப்னு கைஸான், அபூஹாதம், ஷுஃபா இப்னு உயைனா, வலீத் இப்னு முஸ்லிம் ரஹிமஹுல்லாஹ் போன்ற பெரும் அறிஞர்கள் முஹம்மது பின் அஜ்லான் அவர்களிடமிருந்து ஹதீஸ்களை ரிவாயத்து செய்து இருக்கிறார்கள். ஆனால் இப்னு யூனுஸ் என்பவர் மட்டும் 'முஹம்மது இப்னு அஜ்லான் அவர்கள் தன் மனைவியிடம் ஷரீஅத் அனுமதி;க்காத முறையில் உடலுறவு கொண்டதாக செய்தி மக்களிடையே பரவியது' என்று கூறுகிறார். இந்த இப்னு யூனூஸ் யாரென்றே அறியப்படாதவர் ஹதிஸ்களை வல்லுனர்களின் ஒரு மித்த கருத்தாகும்.

ஒரு நபித்தோழர் தொழுகையின் இருப்பில் இருந்து கொண்டு இரண்டு விரல்களை நீட்டி சமிக்ஞை செய்தார்கள், இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் ஒரு விரலால் சமிக்ஞை செய்யுங்கள், ஏனெனில் உங்கள் இரட்சன்க்(அல்லா) ஒருவனே! என்று விளக்கினார்கள். என அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இமாம் பைஹகி(ரஹ்)

இறைவன் ஒருவன் என்பதை (சொல்லுடனும்) செயலாலும் உணர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நபி(ஸல்) அவர்கள் ஒரு விரலை உயர்த்தி காட்டினார்கள் என அப்துல்லா இப்னு ஜுபைர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இமாம் அவ்ஜஸ்(ரஹ்)ஹஜ்ரத் ஹஃபாப் இப்னு ஈமா(ரலி) அவர்களுக்கு பக்கத்தில் ஒரு மதினாவாசி தொழுதார்கள், அவர் இருப்பில் இருக்கும் போது வழக்கப்படி ஒரு விரலை உயர்த்தி சமிக்ஞை செய்தார்கள். தொழுகை முடிந்தவுடன் நபித்தோழர் அந்த நபரை பார்த்து, எனது சகோதரின் மகனே! நீங்கள் இருப்பில் ஒரு விரலால் சமிக்ஞை செய்தீர்களே அதற்கு என்ன காரணம் என்று கூற முடியுமா? என்று கேட்டார்கள், அதற்கவர், மார்க்க அறிஞர்களும், பெரியவர்களும் இவ்வாறு செய்கிறார்கள், அதை பின் பற்றி நானும் செய்கின்றேன், வேறகாரணம் எதுவும் எனக்கு தெரியாது என்று பதில் கூறினார்கள், அதற்கு நபித்தோழர், நிச்சியமாக நீங்கள்(சமிக்ஞை செய்தது), நல்ல காரியத்தை செய்தீர்கள், விரலை உயர்த்துவதற்குரிய காரணத்தை நான் விளக்கி கூறுகின்றேன் என்று விளக்க ஆரம்பித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் இருப்பில் அஷ்ஹது அன்லாஇலாஹ என்று ஓதும் போது தங்களின் ஒரு விரலால் சமிக்ஞை செய்தார்கள், அதை பார்த்த காபிர்கள் ''இதோ முகம்மது(ஸல்) சமிக்ஞையால் நம் மீது ஏதோ சூனியம் செய்கிறார்கள் என்று அவதூறு கூறினார்கள், உண்மையில் நபி(ஸல்) அவர்கள் ஒரு விரலை உயர்த்தி (சமிக்ஞை செய்தது) வணக்கத்துகுரியவன் அல்லா ஒருவன் தான் என்பதை செயலாலும் உணர்த்தினார்கள்.
இமாம் பைஹகி(ரஹ்)
இமாம் அல் முன்தகா(ரஹ்)
இமாம் அவ்ஜஸ்(ரஹ்)
இமாம் பைஹகி(ரஹ்), இமாம் அல்லாமா மஜ்துக்தீன்(ரஹ்), இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்) ஆகியோர்கள் ஆஸிப் பின் குலைப்(ரஹ்) அவர்களின் வழியாக வரும் வாயில் இப்னு ஹுஜ்ர்(ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதிஸை விட இப்னு உமர்(ரலி),இப்னு ஜுபைர்(ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதிஸ் ஸஹிஹ் என்று நம்புகிறோம், ஏனெனில் விரலை அசைத்து கொண்டே இருக்கமாட்டார்கள் என்று கூறும் ஹதிஸின் அறிவிப்பாளர் மிகவும் நம்பகமானவர்கள், நன்கு விளக்கம் உடையவர்கள் என்பதில் (எங்கள் யாருக்கும்)சந்தேகமில்லை
இமாம் அல் முன்தகா(ரஹ்)

விளக்கம்:
மேல் உள்ளவற்றில் ஷிஃபா(ரஹ்),பிஷர்(ரஹ்),அப்துல் வாகித்(ரஹ்),ஸுஃப்யான்(ரஹ்) ஆகிய நால்வரும் துஆவில் ஆட்காட்டி விரலால் சமிக்ஞைதான் செய்தார்கள் என வந்துள்ளது. ஜாயிதா(ரஹ்) அவர்கள் அசைத்தார்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளது. இவர்கள் சொல்வது போல் யாரையோ அழைப்பது ப்பொல் அதைத்து கொண்டே இருந்தார்கள் என்ற வாசம் இடம் பெறவில்லை, இது சமிக்ஞை செய்த்ததையும், உயர்த்தினார்கள் வரும் ஹதிஸை மறுப்பவர்கள் திணிக்கப்பட்டதாகும், இட்டுகட்டப்பட்டதாகும், இவர்கள் யாரையோ அழைப்பது போல் என்ற வார்த்தை இட்டுகட்டி பித்னாவை ஏற்படுத்துக்கின்றார்கள்.

ஹதீஸ்:6 பின்பு தனது விரல்களை மடக்கி வளையமிட்டு, ஒரு விரலை உயர்த்தினார்கள். அப்போது பிரார்த்தித்தவர்களாக அதை அசைக்க கண்டேன்.
ஆதாரம்: முஸனத் அஹ்மது பாகம் 4 பக்கம் 318
அறிவிப்பவர்: வாயில் இப்னு ஹுஜ்ரு

ஹதீஸ்:7 அதே ஹதீஸ் தொடரில்....... பின்பு குளிர் காலத்தில் நான் வந்தபோது, பல மனிதர்கள் குளிரின் காரணமாக போர்த்திக் கொண்டிருந்த நிலையில், அவர்களுடைய கைகள் அவர்களின் ஆடைகளுக்குள் ஆடிக் கொண்டிருந்ததை நான் கண்டேன்.
ஆதாரம்: முஸ்னத் அஹ்மது பாகம் 4, பக்கம் 318
அறிவிப்பவர்: வாயில் இப்னு ஹுஜ்ரு.

குறிப்பு:- விரலை அசைத்துக் கொண்டிருப்பவர்கள் ஆதாரமாகக் கூறும் 6ம், 7ம் ஹதீஸ்களுக்கு தவறாக பொருள் செய்திருப்பது பற்றியும் அதன் தரம் பற்றியும் பின்னர் காண்க.
மேற்கண்ட ஹதீஸக்களிலிருந்தும், வேறு ஹதீஸ்களிலிருந்தும் நபிகளார் அவர்கள் அத்தஹயாத் ஓதும்போது ஆட்காட்டி விரலை
1. உயர்த்தினார்கள் 2. சுட்டிக் காட்டினார்கள் 3. உயர்த்தி நிறுத்தினார்கள் 4. நீட்டி வைத்துக் கொண்டிருந்தார்கள் 5. அசைக்க மாட்டார்கள் 6. அசைப்பார்கள் என்பன போன்ற பல அறிவிப்புகள் கிடைக்கின்றன. இவற்றில் அசைக்க மாட்டார்கள் என்ற ஹதீஸ் பற்றியும் அசைப்பார்கள் என்ற ஹதீஸ் பற்றியும் ஆய்வோம். முதலில் ஹதீஸ் 5ல் சுட்டிக் காட்டிக் கொண்டிருப்பார்கள், அசைக்க மாட்டார்கள் என்ற ஹதீஸ் பற்றி ஆராய்வோம்.

இனி, ஹதீஸ் 6,7 பற்றி ஆராய்வோம்:

சுருக்கம்: 'அசைக்கக் கண்டேன்'.
இந்த ஹதீஸில் ஜாயிதா ரஹிமஹுல்லாஹ் என்பவர் இடம் பெறுகிறார். ஹஜ்ரத் வாயில் இப்னு ஹுஜ்ரு அவர்கள் மூலம் அறிவிக்கும் இந்த ஹதீஸை பதிவு செய்த ஹதீஸ் கலை வல்லுனரான முஹத்திஸ் இப்னு ஹுஸைமா ரஹிமஹுல்லாஹ் அவர்களே கூறுவதைப் பாருங்கள்: இந்த அறிவிப்பில் தவிர வேறு எந்த ஹதீஸிலும் 'விரலை அசைத்தார்கள்' என்று கூறப்படவில்லை. ஜாயிதாவே இதை சுயமாகக் கூறியிருக்கிறார்.

ஆதாரம்: இப்னு ஹுஸைமா ஹதீது தொகுப்பு பக்கம் 354. மேலும் நஸாயீ, தாரமீ, இப்னு ஹிப்பான், முஸ்னத் அஹ்மத் ஆகிய நூல்களில் விரல் அசைப்பதாக வரும் அனைத்து ஹதீஸ்களிலும் ஜாயிதா ரஹிமஹுல்லாஹ் அவர்களே இடம் பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஹஜ்ரத் வாயில் இப்னு ஹுஜ்ரு ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலம் குலைப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும், அவர்களிடமிருந்து மாணவர்கள் அறிவிக்கும் ஹரீஸைப் பார்ப்போம்.
வாயில் இப்னு ஹுஜ்ரு, குலைப், ஆஸிம் பின் குலைப் ரஹிமஹுமுல்லாஹ் ஆஸிப் பின் குலைப்(ரஹ்) அவர்களின் வழியாக அவர்களின் மாணவர்கள் இந்த ஹதிஸ் அறிவிப்பு செய்கிறார்கள்.
1)ஷிஃபா(ரஹ்)
2) பிஷர்(ரஹ்)
3) அப்துல் வாகித்(ரஹ்)
4) ஸுஃப்யான்(ரஹ்)
5) ஜாயிதா(ரஹ்)

இதில் ஷிஃபா(ரஹ்),பிஷர்(ரஹ்),அப்துல் வாகித்(ரஹ்),ஸுஃப்யான்(ரஹ்) ஆகிய நால்வரும் (துஆவில் விரலை)'சுட்டிக் காட்டினார்கள்'(சமிக்சைமட்டுமே செய்தார்கள்) என்றே அறிவித்துள்ளார்கள்,
5. ஜாயிதா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் மட்டும் 'அசைக்கக் கண்டேன்'(விரலை அசைத்தார்கள்) என்று அறிவிக்கின்றனர்.
நூல்: முஸ்னத் அஹ்மது பாகம் 4, பக்கம் 316,317,318,319.
நஸாயீ பக்கம் 126, தாரமீ பக்கம் 314, இப்னு ஹிப்பான் பக்கம் 167, இப்னு ஹுஸைமா பக்கம் 354.
ஒரே ஆசிரியரிடமிருந்து கற்ற மாணவர்களில் ஜாயிதா அவர்கள் மட்டுமே அசைக்கக் கண்டேன் என்று அறிவிப்பதாலும், ஸஹீஹான மற்ற ஹதீஸ்களுக்கு மாற்றமாகக் கூறுவதாலும் அசைப்பதாக வரும் ஹதீஸ் 'ஷாஃத்' என்ற பலகீனமான அந்தஸ்த்தைப் பெறுகிறது. சட்டக்கலை வல்லுனர்களான மத்ஹபுக்குரிய இமாம்கள், அசைக்கக் கண்டேன் என்ற வார்த்தைக்கு ஆட்காட்டி விரலை உயர்த்தும் பொழுது ஏற்படுகிற அசைவைத்தான் குறிப்பிடுவதாக விளக்கம் கூறியுள்ளார்கள். இவ்வாறு பல கோணங்களில் அலசி ஆராய்ந்து முரண்படுவது போல் தோன்றும் ஹதீஸ்களை இணைத்து மக்கள் அமல் செய்ய வசதியாக விளக்கங்களைக் கூறியுள்ளார்கள். இதன் அடிப்படையில் அத்தஹிய்யாத்தில் விரலை நீட்டி வைத்துக் கொண்டு துஆ செய்ய வேண்டும் என்ற விளக்கங்களை ஏற்று ஹதீஸ்களின் அடிப்படையிலேயே மக்கள் செயல்படுத்தி வருகிறார்கள். இனி விரலை அசைத்துக் கொண்டிருப்பவர்கள் ஆதாரமாக் கூறும் ஹதீஸ் எண் 6,7 பற்றி ஆராய்வோம்.

குறைகள் பற்றி அலசுவதற்கு முன், ஹதீஸில் வரும் 'துஆ' என்ற வார்த்தைக்கு பிரார்த்தனை, அழைத்தல் என்ற பொருள்கள் இருந்தாலும், அத்தஹிய்யாத் சம்பந்தமான ஹதீஸ்களில் 'துஆ' என்று வரும் இடங்களில் பிரார்த்தனை என்றுதான் பொருள் கொள்ள வேண்டும் என்பதை ஹதீஸ் 4ல் வரும் 'இதயங்களை புரட்டிக் கொண்டிருப்பவனே!' என்ற தொடர் நபிகளார் அவர்கள் பிரார்த்தனை செய்ததை தெளிவாக் குறிப்பிடுகிறது. மேல் உள்ளவற்றில் ஷிஃபா(ரஹ்),பிஷர்(ரஹ்),அப்துல் வாகித்(ரஹ்),ஸுஃப்யான்(ரஹ்) ஆகிய நால்வரும் துஆவில் ஆட்காட்டி விரலால் சமிக்ஞைதான் செய்தார்கள் என வந்துள்ளது. ஜாயிதா(ரஹ்) அவர்கள் அசைத்தார்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளது. இவர்கள் சொல்வது போல் யாரையோ அழைப்பது ப்பொல் அதைத்து கொண்டே இருந்தார்கள் என்ற வாசம் இடம் பெறவில்லை, இது சமிக்ஞை செய்த்ததையும், உயர்த்தினார்கள் வரும் ஹதிஸை மறுப்பவர்கள் திணிக்கப்பட்டதாகும், இட்டுகட்டப்பட்டதாகும், இவர்கள் யாரையோ அழைப்பது போல் என்ற வார்த்தை இட்டுகட்டி பித்னாவை ஏற்படுத்துக்கின்றார்கள்.

குறைகள்: (ஹதீஸ்௬)
1) ஹதீஸில் வராத 'யாரையோ' என்ற வார்த்தையை அடைப்புக் குறிக்குள் புகுத்தி இருக்கிறார்கள்.
2.) 'அழைப்பது போல்' என்ற வார்த்தையையும் சோர்த்திருக்கிறார்கள்.
3) 'துஆ' என்ற வார்த்தைக்கு 'அழைத்'தார்கள்' என்று தவறாக பொருள் செய்திருக்கிறார்கள்.
குறைகள்: (ஹதீஸ்௭)

இந்த ஹதீஸில் 'குளிரின் காரணமாக கைகள் ஆடிக் கொண்டிருந்ததைக் கண்டேன்' என்று தெளிவாகவே வருகிறது.
1) கைகள் என்று தெளிவாக இருப்பதை ஆட்காட்டி விரல் என்று கூறி தவறு இழைத்திருக்கிறார்கள்.
2) குளிரின் காரணமாக கைகள் ஆடிக் கொண்டிருந்தன என்பதை அத்தஹிய்யாத்துடன் தொடர்பு படுத்தியிருக்கிறார்கள்.
ஆகவே விரலை அசைத்துக் கொண்டிருப்பவர்களின் முதல் ஆதாரம் பலவீனமானது. இரண்டாவது ஆதாரம் குளிரின் காரணமாக கைகள் அசைந்தது சம்பந்தமானது. ஆகவே ஆட்காட்டி விரலை அசைப்பதற்கான ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது.

முடிவுரை:
1) விரலை அசைத்ததாக வரும் ஹதீஸ் 'ஷாஃத்' என்ற பலகீனமான அந்தஸ்த்தை உடையது.
2) 'துஆ' எனற் சொல்லுக்கு பிரார்த்தனை என்றே பொருள் கொள்ள வேண்டும் என்பது ஹதீஸின் மூலம் தெளிவாகிறது.
3) ஹதீஸில் 'யாரையோ' என்ற வார்த்தையோ, 'அசைப்பது போல்' என்ற வார்த்தையோ இல்லை.
4) குளிர் காலத்ததில் அதுவும் குறிரின் காரணமாகவே போர்வைக்குள் கைகள் ஆடிக் கொண்டிருந்தன என்றுதான் ஹதீஸில் வருகிறது. விரலைப் பற்றிக் கூறப்படவில்லை.
5) சுட்டிக் காட்டுதல், உயர்த்துதல், நிறுத்துதல் என்ற வார்த்தைகளுக்கு விளக்கமாக திர்மிதி ஷரீபில் 'பஸத்' நீட்டி வைத்துக் கொண்டிருந்தார்கள் எனறு தெளிவான சொல் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.
6) 53 ஆக முடிச்சிட்டு என்ற சொல், அரபிகள் கைவிரலைக் கொண்டு எண்ணும் முறைப்படி ஆட்காட்டி விரலை நீட்டி வைத்துக் கொண்டு அதன் அடிப்பகுதியில் கட்டை விரலை வைக்கும் நிலையைக் குறிப்பதாகும்.
7) ஹதீதுகளில் விரலை அசைக்கும் முறை பற்றி கூறப்படவில்லை.

உதாரணமாக:
1) மேலும் கீழுமாக அசைக்க வேண்டுமா?
2) விரலை நீட்டி வைத்துக் கொண்டா? குறுக்கி வைத்துக் கொண்டா?
3) தொடர்ந்தா? அல்லது விட்டு விட்டா?
4) வேகமாகவா? அல்லது மெதுவாகவா?
5) வலது பக்கமா? அல்லது இடது பக்கமா?
எனபது போன்ற பல சந்தேகங்கள் எழுவதால் விரலை அசைப்பதற்கு தெளிவான ஹதீஸில் ஆதாரம் கிடையாது. மேலும் அசைக்கத்தான் வேண்டுமென்று விடிவாதம் செய்பவர்கள் கூட இன்று பல விதமாக ஆட்டிக் கொண்டிருக்கிறார்கள்

சரியான அரபி வாசகம்:
ஸிம்மா ரஃபஅ இஸ்பஅஹி ஃபரஅய்த்துஹு யுஹர்ரி குஹா யத்ஊ பிஹா
பின்பு நபியவர்கள் தங்களின்(வலக்கை ஆட்காட்டி) விரலை உயர்த்தினார்கள், அப்ப(டி உயர்த்தும்) பொழுது துஆ ஓதிய நிலையில் விரலை அசைப்பதை பார்த்தேன்.
இமாம் மாலிக்(ரஹ்) அவர்களின் கருத்து:
இமாம் மாலி(ரஹ்) அவர்களிடமும் ஏனைய மார்க்க அறிஞர்களிடமும் விரலாட்டினார்கள் என்ற ஹதிஸிற்கு விரலை உயர்த்தினார்கள் என்றே பொருளாகும், ஆட்டி கொண்டே இருக்க வேண்டும் என்ற அர்த்தம் இல்லை என்று இமாம் மஹல்லி(ரஹ்) அவர்களின் கிரத்தந்தகளில் எழுத்தப்பட்டுள்ளது
இமாம் மாலிக்(ரஹ்) - பக்கம் 32
இமாம் மாலிக் மத்ஹப் சேர்ந்த பிரபலமான மார்க்க அறிஞர் இப்னும் அரபி(ரஹ்) அவர்கள் தமது ஆரிழதுல் அஷ்வதி(திர்மதியின் விளக்க உரையில்) எனற நூலில் அத்திஹ்யாத்து இருப்பில் விரல் ஆட்டுவதை மிகக் கடுமையாக கண்டித்துள்ளார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள், தஷஹ்ஹுது இருப்பில் அமரும்போது இடது கையை இடது முழங்காலிலும், வலது கையை வலது முழங்காலிலும் வைத்து 53 ஆக முடிச்சிட்டு வைத்தபடி ஆட்காட்டி விரலால் சுட்டிக் காட்டினார்கள்.என இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
ஆதாரம்: முஸ்லிம்(ரஹ்)

இருப்பில் ஸலாம் கூறும் முறை:
நபி(ஸல்) அவர்கள் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்,அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ், எனக் கூறி வலது புறமும், இடது புறமும் ஸலாம் கொடுப்பவர்களாக இருந்தார்கள் என அப்துல்லா பின் மஸ்வூத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
இமாம் திர்மதி(ரஹ்) - 272 - ஸஹிஹ்

Source: Ahlus Sunnath wal Jamath Blogspot
  Main Links
- Homepage
- Latest Events
- Masjid Location
- Photo Gallery
- Video Gallery
About Masjidhun Noor
- Masjidhun Noor History
- Management Committee
- Highlevel Committee
- Execution Committee
- Donate for Masjidhun Noor
Masjidhun Noor Activities
- Madharasa Classes
- Ladies Events
- Nikkah Registration & NOC
Bayans
- Jumma Bayans
- Weekly Bayans
- Ladies Bayans
- Special Bayans
- Ramadhan Special Bayans
- Ramadhan Taraweeh 2017
Useful Links
- Islamic Artices
- Islamic Websites
- Haj Committee Details
- Minority Scholarships
- Government Schemes
 
Copyrights 2010 & Beyond. Masjidhun Noor - Ahlus Sunnath Val Jama-Ath
Total Visitors So Far:
Designed & Maintained by: ‘Jumaana’ Syed Ali
1 2 3 4 5 6